வாரிசை வரவேற்கும் வளையல் அணியும் விழா..கன்னிகா சினேகனுக்கு நடந்து முடிந்த வளைகாப்பு விழா
கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தி அறிவித்த கன்னிகா சினேகனுக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. வாரிசை வரவேற்கும் வளையல் அணியும் விழா என இந்த நிகழ்வின் புகைப்படங்களை ஸ்டார் தம்பதிகள் பகிர்ந்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் ஸ்டார் தம்பதிகளாக பாடலாசிரியர் சினேகன் - கன்னிகா ஆகியோர் இருந்து வருகிறார்கள். இதில் நடிகையாக மட்டுமல்லாமல் பன்முக திறமையை கொண்டவராக இருந்து வரும் கன்னிகா ரவி, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது விடியோக்கள், புகைப்படங்கள் பகிர்ந்து வைரலாக வருகிறார்.
குறிப்பாக கிராமத்து வாழ்க்கை, குடும்ப உறவு குறித்து கன்னிகா பகிரும் ரிலீஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இந்த ஸ்டார் ஜோடி இம்மாத தொடக்கத்தில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தனர். கன்னிகா தான் கார்ப்பமாகி இருப்பதை தெரிவித்திருந்தார்.
கன்னிகாவுக்கு வளைகாப்பு
இதையடுத்து கன்னிகா கர்ப்பாகமாகி 5 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், அவருக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. இதன் புகைப்படங்கள் சினேகன் - கன்னிகா ஜோடி "வரப்போகும் எங்கள் வாரிசை வரவேற்கும் ஐந்தாம் மாதம் வளையல் அணியும் விழா" என்று குறிப்பிட்டு தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு சீரியல் நடிகையான கன்னிகா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கன்னிகா கர்ப்பமாகி இருக்கும் நிலையில், இந்த தம்பதியினர் பெற்றோர் ஆக இருக்கிறார்கள்.
சினேகன் - கன்னிகா காதல் கதை
சினேகன் உடன் காதல் ஏற்பட்ட கதையை நடிகை கன்னிகா முன்பு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதில், "ஒரு நாள் ஒரு திரைப்படத்தின் ஆடிஷனுக்காக நான் சென்றிருந்தேன். அங்கு, எனக்கு தங்கை கதாபாத்திரம் என்று சொன்னதோடு, என்னை ஆடிஷன் செய்வதற்காக சினேகன் என்பவர் வருவார் என்று சொன்னார்கள்.
நானோ யாராக இருந்தால் நமக்கென்ன ஆடிஷன் செய்யப்போகிறார்கள். வாய்ப்பு இருந்தால் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைத்து சென்றேன். அப்போதுதான் சினேகன் என்பவர் இந்த பாடல்களை எல்லாம் எழுதி இருக்கிறார் என்று சொல்லி என் கையில் ஒரு லிஸ்ட்டை கொடுத்தார்கள்.
முதலில் புரொபோஸ் செய்தது யார்?
அந்த லிஸ்டில் உள்ள பாடல்கள் அனைத்துமே நான் சிறுவயதில் அடிக்கடி கேட்டு கடந்து வந்த பாடல்கள். அது தெரிந்த பின்னர் அவரை சந்திக்கும் முன்னர் இதயம் படப்படத்தது. அதை மறைத்துக்கொண்டு அவரின் தங்கையாகவும் நடித்தேன். எல்லாம் முடிந்து வெளியே வந்த பின்னர், அவர் எனக்கு நல்ல சந்திப்பு கனி என்று ஒரு மெசேஜ் அனுப்பினார்.
அதன் பின்னர்தான் முதன்முறையாக நாங்கள் பழக ஆரம்பித்தோம். பழகிய கொஞ்ச நாட்களிலேயே அவர் என்னிடம் காதலை சொல்லிவிட்டார். நான் அதற்கு அப்போது பதில் எதுவுமே சொல்லவில்லை.
எனக்கு விருப்பம் இருந்த போதும், நான் உடனடியாக சொல்லாமல் கொஞ்ச காலம் எடுத்துக் கொண்டேன். ஒரு கார்த்திகை அன்று கடையில் மஞ்சள் கிழங்கு தாலிக்கயிறு உள்ளிட்டவற்றை வாங்கினேன். அதை பார்த்த அந்த கடைக்காரப் பெண் அதில் கொஞ்சம் குங்குமம் வைத்துக்கொடுத்தார். அன்றைய தினம்தான் விளக்குகள் ஒளிந்து கொண்டிருக்கு அதற்கு மத்தியில் அவரிடம் நான் காதலை சொன்னேன்" என்றார்.
கன்னிகா ரவி படங்கள்
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சர்யகுறி என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் கன்னிகா. இதன் பிறகு கலைஞர் டிவியில் மற்றொரு சீரியலான கல்யாண வீடு என்ற தொடரிலும் நடித்ததோடு, சபாஷ் சரியான சிரிப்பு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
2015இல் வெளியாந சரித்திரம் பேசு படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
டாபிக்ஸ்