கங்குவா ஒரே கூச்சலா இருக்கு.. முதல் நாள் வசூல் வெளியீடு.. தியேட்டரில் வால்யூமை குறைக்கச்சொன்ன தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
கங்குவா ஒரே கூச்சலா இருக்கு.. முதல் நாள் வசூல் வெளியீடு.. தியேட்டரில் வால்யூமை குறைக்கச்சொன்ன தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியது குறித்து அறிவோம்.

கங்குவா ஒரே கூச்சலா இருக்கு.. முதல் நாள் வசூல் வெளியீடு.. தியேட்டரில் வால்யூமை குறைக்கச்சொன்ன தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
கங்குவா ஓடும் திரையரங்குகளில் ஒலி சத்தத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பு குறைக்கச் சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.