மொத்தமாக சரிந்த வசூல்.. முதல் நாள் வசூலில் பாதியைக் கூட எட்டாத கங்குவா! என்ன செய்யப் போகிறார் சூர்யா?
கங்குவா திரைப்படம் 2000 கோடி ரூபாய் வசூலைக் குவிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தப் படம் வெளியான 2ம் நாளில் எவ்வளவு வசூலை எட்டியுள்ளது என்பதைப் பார்ப்போம்.

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
கங்குவா வசூல்
கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 14.9 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் படம் வெளியான 2ம் நாளான நேற்று முதல் நாள் வசூலில் பாதி கூட இல்லாமல் வெறும் 3.24 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 2 நாட்களில் மொத்தமாக படம் 18.14 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்திருந்தது.