கங்குவா ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? படம் எப்படி இருக்கு.. நெட்டிசன்கள் சொல்வது என்ன?
Kanguva OTT : கங்குவா திரைப்படம் பெரிய பட்ஜெட் படம். எதிர்பார்த்தது போலவே முதல் காட்சியில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. பிளாக்பஸ்டர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இனி ஓடிடி ரிலீஸ் எப்போது, எந்த ஓடிடியியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காங்குவா' திரைப்படம் இன்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் 11,000 திரையரங்குகளில் வெளியானது. பெரிய பட்ஜெட் படம் எதிர்பார்த்தது போலவே முதல் காட்சியில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. பிளாக்பஸ்டர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இனி ஓடிடி ரிலீஸ் எப்போது, எந்த ஓடியியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு
ரூ. 350 கோடிபட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் கங்குவா பீரியட் வார் டிராமா என்பதால் நீண்ட நாட்களாக இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி, அமேசான் பிரைம் வீடியோ இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது.