கங்குவா சூர்யா கெட்டப்பில் வந்த ரசிகர்..பேண்ட் வாத்தியங்களுடன் வேற லெவல் கொண்டாட்டம்! முதல் ஷோ பார்த்தவர்கள் கருத்து
கங்குவா படத்தை பார்க்க களியக்காவிளையில் கங்குவா சூர்யா கெட்டப்பில் வந்த ரசிகர் பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதிகாலையிலேயே பேண்ட் வாத்தியங்கள் முழங்க படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டம் வெளிப்படுத்தியுள்ளனர்.
சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கங்குவா படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 980 நாள்கள் கழித்து தங்களது அபிமான ஹீரோவை திரையில் காண ரசிகர்களை அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கங்குவா படத்துக்கு முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தொடங்கியபோதிலும், அண்டை மாநிலங்கலான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிகாலை காட்சியை திரையிடப்பட்டது. இதனால் அதிகாலையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கங்குவா கெட்டப்பில் வந்த ரசிகர்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி அருகே கேரள பார்டரை ஒட்டி அமைந்திருக்கும் திரையரங்கில் கங்குவா படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. இதையடுத்து படத்தை காண குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பேன்ட் இசையத்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து படம் தொடங்குவதற்கு முன் பட்டாசுகள் வெடித்து தள்ளினர்.
கங்குவா படத்தில் வரும் சூர்யாவின் கெட்டப்பில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரிடம் பலரும் செஃல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
முதல் ஷோ பார்த்தவர்கள் கருத்து
கங்குவா முதல் ஷோவை ரசிகர்கள் மட்டுமன்றி, பேமிலி ஆடியன்ஸ் பலரும் வந்து பார்த்து ரசித்துள்ளனர். படம் பார்த்தவர்கள் பலரும் நன்றாக இருப்பதாக நேர்மறையான விமர்சனங்களையை வெளிப்படுத்தியுள்ளனர். சூர்யாவின் நடிப்பு அற்புதமாக இருப்பதாகவும், காட்சிகள் ஒவ்வொன்றும் பிரமாண்டமாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளனர். திஷா பதானி, பாபி தியோல் ஆகியோரும் சிறப்பாக நடித்திருப்பதாக கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல் காட்சி
தமிழ்நாட்டில் கங்குவா படத்தின் முதல் ஷோ காலை 9 மணிக்கு தான் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னரே பிற மாநிலங்களில் படம் பார்த்தவர்கள் படம் பற்றி பாஸிடிவ் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
980 நாள்கள் கழித்து ரசிகர்கள் சூர்யாவை திரையில் பார்த்திருக்கும் நிலையில், அவரது கம்பேக் தரமாக இருப்பதாக மற்ற பகுதிகளில் இருந்து விமர்சனங்கள் வருகின்றன. தமிழிலும் படம் குறித்து நேர்மறை விமர்சனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில் வெளியாகிள்ளது. எப்படியும் ரூ.2 ஆயிரம் கோடி வசூல் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கும் கங்குவா, வட இந்தியாவில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கங்குவா கதை
நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர்தான் குலத்தொழில்.
வீரமும், இயற்கையும் விளைந்த அந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது ரோமானிய அரசு. அவர்கள் அதற்காக கொடுவாவிற்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான். இதைக்கண்டு பொங்கிய கங்குவாவும், அவனது இனமும் அவனை தீ வைத்து கொழுத்த, அவன் மனைவி மற்றும் மகனையும் கொல்ல வேண்டும் என்று இன மக்கள் கூறுகின்றனர்.
அதற்கு கங்குவா எதிராக நிற்க, என் மகன் இனி உன் மகன் என்று சொல்லி, கங்குவன் கையில் மகனை ஒப்படைத்து விட்டு உடன் கட்டை ஏறுகிறார் கொடுவாவின் மனைவி.. அதன் பின்னர் என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்ல துடிக்கும் கொடுவாவின் பகை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை.