Top 10 Cinema : ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை.. ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா.. சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema : ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை.. ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா.. சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்!

Top 10 Cinema : ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை.. ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா.. சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்!

Divya Sekar HT Tamil Published Nov 14, 2024 10:10 AM IST
Divya Sekar HT Tamil
Published Nov 14, 2024 10:10 AM IST

ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை, ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா, சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ் என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top 10 Cinema : ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை.. ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா.. சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்!
Top 10 Cinema : ஹரீஷ் கல்யாணுடன் நடிக்க பயந்த நடிகை.. ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா.. சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்!

கங்குவா ரிலீஸ் -ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முடிவு கட்டும் விதமாக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்ககத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பீரியட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான கங்குவா இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்படும் நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

சிவாகார்த்திகேயன் சர்ப்ரைஸ்

சிவாகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதையடுத்தும் அமரன் பட கெட்டப்பில் தனது மனைவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

6 படங்களுடன் ஓய்வு பெறுகிறார் அமீர்கான்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை. கொரோனா நேரத்தில் தான் வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவுக்கே அர்பணித்து, குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற பெரும் குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டுவிட்டது. இனி என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும். இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். 6 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் சிறந்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க பயந்தேன்- சுவாசிகா

லப்பர் பந்து படத்தில் பல நடிகைகள் ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராக நடிக்க அவர்கள் தயங்கியதாகவும் ஒரு தகவலை கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் எனக்கும் அந்த பயம் இருந்தது என சுவாசிகா கூறியுள்ளார். ஒருகட்டத்தில், ஹரீஷ் கல்யாணுக்கு மாமியாராக நடித்தவர் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று தயங்கினேன். ஆனால், அதையும் மீறி அசோதா கேரக்டர் எனக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தது. எல்லோருக்கும் என் வயது தெரியும். அதனால், ரிஸ்க் எடுக்க தயங்கக் கூடாது என்று தயாரானேன். இப்போது என் நடிப்பை அனைவரும் பாராட்டுகின்றனர். எனவே, வயதைக் காரணம் காட்டி எந்தவொரு வாய்ப்பையும் இழந்துவிடக்கூடாது.

ஆட்டிசம் பாதித்த மூத்த மகன் - பிரியா ராமன் உருக்கம்

மூத்த மகன் ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்பதை சமீபத்தில் ரஞ்சித் குறிப்பிட்டார். இதுகுறித்து பிரியா ராமன் அளித்துள்ள பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஆதித்யாவை நாங்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. நான் ஆதித்யா அம்மா என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ரஞ்சித்தின் நிறைய குணங்கள் ஆதித்யாவிடம் இருக்கிறது. மிகவும் பாசமான, அன்பான மகன். நாங்கள் சோகமாக இருந்தால், உடனே வந்து கட்டிப்பிடிப்பான். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பான். அவன் எங்களின் அன்புக் குழந்தை. அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவோம். அவனது பயணத்தில்தான் எங்களது பயணமும் இணைந்திருக்கிறது. நான் எங்கே சென்றாலும் ஆதித்யாவையும் அழைத்துச் செல்வேன் என கூறியுள்ளார்.

கணவரை விவாகரத்து செய்தது ஏன்? மனம் திறந்த இஷா கோபிகர்

தமிழ், இந்தி உள்பட ஏராளமான மொழிகளில் நடித்தவர், இஷா கோபிகர். அவர் காதலித்து திருமணம் செய்திருந்த தொழிலதிபர் டிம்மி நரங்கை விவாகரத்து செய்தார். இதுகுறித்து முதல்முறையாக அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். நாங்கள் கணவன், மனைவி இல்லை. ஆனால், எங்கள் மகளுக்கு பெற்றோர் என்ற விஷயம் எப்போதும் மாறாது. தற்போது நானும், டிம்மி நரங்கும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் எதையும் எதிர்பார்க்காவிட்டால் உறவுகள் மேம்படும் என்று நினைக்கிறேன். திருமண வாழ்க்கையில் எது தவறாக மாறியது என்று தெரியவில்லை. நாங்கள் அப்படியே விலகிச்செல்ல ஆரம்பித்தோம். இது அவரது முடிவு. எங்கள் வாழ்க்கை ஒர்க்அவுட் ஆகவில்லை என்றார்.

பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்

பிரணவ் மோகன்லால், விவசாய பண்ணையில் வேலை பார்ப்பதாக அவரது தாயார் சுசித்ரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி ஸ்பெயினிலுள்ள பண்ணை ஒன்றில் மோகன்லால் மகனும் நடிகருமான பிரணவ், வேலை பார்த்து வருகிறார். மோகன்லாலின் மகனான பிரணவ், வித்தியாசமானவர். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடிப்பார். அதில் வாங்கும் சம்பளத்தைக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். 3 மாதம் 4 மாதம் என வெளிநாடுகளில் இருப்பார் என கூறியுள்ளார்.

ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம்

இந்திய சினிமாக்களை பாலிவுட், தென்னிந்தியா, போஜ்புரி என பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் சில பாடகர்கள் டாப் சிங்கராக இருந்து வருகிறார்கள். அத்துடன் ஒரு சில ஒட்டுமொத்த மொத்த இந்தியாவின் குரலாக ரசிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்தியர்களால் அதிக ரசிக்கப்படும் குரலாகவும், பாடகராகவும் இருப்பவர் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இவர்தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகராகவும் இருந்து வருகிறாராம். இவர் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக திரைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூலி ரிலீஸ் எப்போது?

கூலி படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினி காந்த்தின் 171வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி வரும் 2025ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.