Kanguva Teaser: ‘பெருமாச்சி..’ மிரட்டும் சூர்யா.. போட்டிக்கு நிற்கும் பாபி கங்குவா டீசர் இங்கே!-kanguva teaser suriya siruthai siva period actioner kanguva teaser out - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanguva Teaser: ‘பெருமாச்சி..’ மிரட்டும் சூர்யா.. போட்டிக்கு நிற்கும் பாபி கங்குவா டீசர் இங்கே!

Kanguva Teaser: ‘பெருமாச்சி..’ மிரட்டும் சூர்யா.. போட்டிக்கு நிற்கும் பாபி கங்குவா டீசர் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 06, 2024 07:03 PM IST

வில்லனாக அண்மையில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

கங்குவா படத்தின் டீசர் இங்கே!
கங்குவா படத்தின் டீசர் இங்கே!

 

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

வில்லனாக அண்மையில் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்நோக்கி காத்திருந்த சமயத்தில் டீசரானது, மாலை 6 மணிக்கு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இந்த நிலையில் தற்போது கங்குவா படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. 

முன்னதாக, அமேசான் பிரைம் வீடியோ கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கி இருக்கிறது .இதற்காக பிரைம் வீடியோ ரூ.80 கோடி கொடுத்துள்ளதாகவும், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி இருக்கிறது என்றும் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறினார். இந்தி உள்ளிட்ட பிற மொழிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

இந்தப்படம் குறித்து முன்னதாக பேட்டியளித்த சிறுத்தை சிவா, “சூர்யா சாருடன் பணிபுரிந்தது அருமையான அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர்; ஒரு சிறந்த மனிதர்; அவருடன் வேலை பார்த்தது வசதியாக இருக்கிறது.

அவர் எங்களின் வேலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மொத்த குழுவும் இந்த வாய்ப்பை எப்படியான ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்து இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இந்த கதையை நம்பி என்னுடைய விஷனை பெரிய திரையில் கொண்டு வர விரும்பி இருக்கிறார்கள்.” என்றார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கால் பதித்து இருக்கும் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். மேலும் அவர் தனக்கு இது தனித்துவமான அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். போஸ்டரில் காண்பிக்கப்பட்டு இருக்கும் கழுகு, டைட்டில் அறிவிப்பு வீடியோவில் வந்த நாய் மற்றும் குதிரை ஆகியவற்றுக்கு படத்தின் கதையில் சம்பந்தம் இருக்கிறது” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.