Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக்..அதிரடியில் மிரட்டிய சத்யா - சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் தெரியுமா?-kamal haasan starrer super hit movie is remake of this bollywood movie know more - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக்..அதிரடியில் மிரட்டிய சத்யா - சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் தெரியுமா?

Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக்..அதிரடியில் மிரட்டிய சத்யா - சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 22, 2024 12:57 PM IST

Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக், வித்தியாசமான மேக்கிங் அதிரடியில் மிரட்டிய சத்யா திரைப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் என்பது பலருக்கு தெரியாது. சத்யா படத்தின் ஸ்பெஷல் என்ன என்பதை பார்க்கலாம்.

Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக்..அதிரடியில் மிரட்டிய சத்யா - சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் தெரியுமா?
Best Tamil Remakes: கமலின் மாஸ் லுக்..அதிரடியில் மிரட்டிய சத்யா - சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக் தெரியுமா?

ஆக்‌ஷன் த்ரில்லர் கேங்ஸ்டர் படமான சத்யா 1988இல் வெளியானது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இது அவரது அறிமுக படமாகும். இந்தியில் 1985இல் சன்னி தியோல் நடிப்பில் வெளியான அர்ஜுன் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருப்பது பலருக்கும் தெரியாது.

சன்னி தியோல் நடித்த அர்ஜுன் படத்தில் அவருக்கு ஜோடியாக டிம்பிள் கபாடியா நடித்திருப்பார். ஒவ்வொரு ஷாட்டும் ரீமேக் செய்யப்படாமல் படத்தின் மையக்கதையை வைத்து பல்வேறு மாற்றங்களுடன் கமல் நடிப்பில் இந்த படம் தமிழில் சத்யா என்ற பெயரில் உருவானது.

சத்யா படத்தின் ஸ்பெஷல்

ஒரிஜினல் கதையை அப்படியே உருவாக்கியிருந்தாலும், லுக், நடிப்பு, மேக்கிங் என அனைத்திலும் வித்தியாசப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு புதுமையான அனுபவத்தை கமல் - சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி தந்தார்கள். இதற்கு சரியான அங்கீகாரத்தையும் ரசிகர்கள் தந்தார். படத்தில் கமலின் தாடி லுக், கையில் காப்பு அந்த காலகட்டத்தில் பேஷனாக உருவெடுத்தது. படத்தில் இடம்பிடித்த அதிரடி சண்டை காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை போட்டு கொடுத்தது.

வேலையில்லாத இளைஞனாக சமூகத்தில் நடக்கும் அவலங்களை பார்த்து கொந்தளிக்கும் கேரக்டரை அப்படி தனது நடிப்பால் பிரதிபலித்திருப்பார் கமல். நட்புக்கு மரியாதை, சோகம், வலி, காதல், ஏமாற்றம் என அனைத்தையும் சந்திக்கும் கதாபாத்திரத்தில், அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.

நல்லவன் போல் வந்து வில்லனாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிட்டிக்கு சிறந்த வில்லனுக்கான விருதும் கிடைத்தது. இவருக்கு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

தனித்துவ மேக்கிங்

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் எதார்த்தம் மீறாமலும், புதுவித ஒலியமைப்புடனும் இடம்பிடித்திருக்கும். விக்ரம் தர்மா சண்டைகாட்சிகளை அமைத்திருப்பார். குறிப்பாக காவல் நிலையம் கேட் அருகில் ரவுடி கூட்டத்தை பார்த்து முதலில் அவர்களை தாக்க அங்கிருக்கும் செங்கலை எடுக்கும் கமல், அந்த நேரத்தில் சைக்கிள் கேரியரில் உருட்டுக்கட்டைகளுடன் செல்பவரிடம் இரண்டு கட்டைகளை உருவி, ரவுடிகளை பந்தாடுவார். இந்த காட்சி மிகவும் எதாராத்தமாக வருவதற்காக ஷூட்டிங் என்பது தெரியாமலேயே எடுக்கப்பட்டது.

கேமராக்களை மாடியில் மறைத்து வைத்தும், காரில் வைத்தும் எடுத்துள்ளனர். மிகவும் மெனக்கெட்டு எடுக்கப்பட்ட இந்த சீன் ஒரு தெருச்சண்டை எபெக்ட்டை கொண்டதாக இருப்பதுடன், சண்டைக்காட்சிகளில் முன் மாதிரியாக இருந்துள்ளது.

அதேபோல் பொதுமக்கள் முன்னிலையில் நண்பன் கொல்லப்பட்டதை அறிந்த பின்னர், சாட்சி சொல்ல வருமாறு அந்த பகுதியினரிடம் கமல் மன்றாடும் காட்சியும் கவனிக்கதகுந்த வகையில் இருக்கும்.

பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதை உருவாக்கிய விதத்தில் தனித்துவம் பெற்று இருந்த இந்த படம், தமிழ் சினிமாவுக்கு புதுமையான ட்ரெண்டை உருவாக்கியது.

கமல் - அமலா காதல்

சீரியஸாக செல்லும் படத்துக்கு இதம் தரும் விதமாக கமல் - அமலா இடையிலான காதல் காட்சிகள் அமைந்திருக்கும். அமலாவிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சியைஇளையராஜாவின் இசையுடன் கவிதைத்துவமாக எடுத்திருப்பார்கள். இருவருக்கும் இடையிலான வளையோசை களகளவென பாடல் காதலர்களின் ரிங்டோனாக இன்று வரையிலும் ஒலித்து வரும் பாடலாக இருக்கிறது. கேரள பெண்ணாக வரும் அமலா, தனது பார்வையால் கண்களை கொள்ளை கொண்டிருப்பார்.

இளையராஜாவின் அற்புத பாடல்கள், பின்னணி இசை படத்தின் மற்றொரு ஹைலைட்டான விஷயமாக அமைந்தது.

எம்ஜிஆருக்கு குருதட்சனை

சத்யா ஒரிஜினல் பதிப்பான அர்ஜுன் படத்துக்கு சிறந்த இயக்குநர், சிறந்த கதைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அத்துடன் அந்த காலகட்டத்திலேயே ரூ. 8 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது.

இதை போல் தமிழிலும் வசூலில் சக்கை போடு போட்ட சத்யா திரைப்படம், ரிலீஸான ஆண்டில் அதிக வசூலை ஈட்டிய படமாக மாறியது.

1987 டிசம்பரில் எம்ஜிஆர் இறந்து போனார். அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த படத்தை எம்ஜிஆருக்கு சமர்ப்பணம் என்றே டைட்டில் கார்டில் எம்ஜிஆர் புகைப்படத்தை காட்டி தொடங்கயிருப்பார் கமல்ஹாசன்.

தமிழில் வெளிவந்த சிறந்த ரீமேக் படங்களில் ஒன்றாகவும், ஒரிஜனலை காட்டிலும் தனித்துவம் பெற்ற படமாகவும் ரசிகர்களை கவர்ந்தது சத்யா திரைப்படம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.