தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalakshetrarow:‘உங்களுக்கே அப்படின்னா எங்களுக்கு எவ்ளோ எரியும்’- அபிராமி காட்டம்

Kalakshetrarow:‘உங்களுக்கே அப்படின்னா எங்களுக்கு எவ்ளோ எரியும்’- அபிராமி காட்டம்

Kalyani Pandiyan S HT Tamil
Apr 13, 2023 12:20 PM IST

கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக அபிராமியை சாடியிருந்த குட்டிபத்மினிக்கு தற்போது அவர் பதிலளித்து இருக்கிறார்

குட்டிபத்மினிக்கு அபிராமி பதில்!
குட்டிபத்மினிக்கு அபிராமி பதில்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து அங்கு பயிலும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய ஹரிபத்மநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 3 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஹரிபத்மநாதன் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்று அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி குரல் எழுப்பினார். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கியவருக்கு ஆதரவு அளிப்பதா? என்று கூறி பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் அவருக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக தான் பேச வேண்டும் என்று கூறி சில ஆசிரியர்கள் தன்னை நிர்பந்திப்பதாக கூறி சென்னை காவல்துறையில் அவர் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நான் 10 ஆண்டுகளுக்கு முன் படித்த கலாஷேத்ரா இப்போது இல்லை. இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. நான் விளம்பரத்திற்காக பேசி வருவதாக பலர் கூறி வருகின்றனர், அதில் உண்மையில்லை. ஹரிபத்மன் மிகவும் நல்லவர்” என்று பேசினார்.

அபிராமி பதிவிட்ட பதிவு
அபிராமி பதிவிட்ட பதிவு

இந்தப் பேட்டியை பார்த்த நடிகை குட்டி பத்மினி அண்மையில் கொடுத்த நேர்காணலில், “ ஒரு சின்ன எலுமிச்சை பழத்தை வேண்டுமென்றால் நாம் மறைத்து விடலாம். ஆனால் பூசணிக்காயை மறைக்க முடியாது. நீங்கள் திரைத்துறையில் இயங்குவதால், உங்களை தொடும் போது எந்த ஃபீலும் இருக்காது. ஆனால் மற்ற பெண்கள் அப்படியா..” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

தற்போது இதற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ள அபிராமி, “ திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை போன்றவர்கள் இல்லை குட்டி பத்மினி ஆண்ட்டி.

உங்களுக்கு ஃபீலிங் வரவில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இன்னொரு விஷயம், உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்கறோம் ஆண்ட்டி. வயதான காலத்தில் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அதில் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்