Jr.NTR: பற்றி எரியும் ஜூனியர் என்டிஆர்... கதறும் ரசிகர்கள்... என்ன நடக்கிறது தேவாரா-1ல்?-junior ntr devara movie cutout burned in hyderabad theatre - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jr.ntr: பற்றி எரியும் ஜூனியர் என்டிஆர்... கதறும் ரசிகர்கள்... என்ன நடக்கிறது தேவாரா-1ல்?

Jr.NTR: பற்றி எரியும் ஜூனியர் என்டிஆர்... கதறும் ரசிகர்கள்... என்ன நடக்கிறது தேவாரா-1ல்?

Malavica Natarajan HT Tamil
Sep 28, 2024 11:14 AM IST

Jr.NTR: தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜீனியர் என்டிஆரின் தேவாரா-1 திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அந்தப் படத்திற்காக தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்டிஆரின் பேனரை ரசிகர்கள் தீயிட்டு கொளுத்தியதாக தகவல்கள் பரவி வருகிறது.

Jr.NTR: பற்றி எரியும் ஜூனியர் என்டிஆர்... கதறும் ரசிகர்கள்... என்ன நடக்கிறது தேவாரா-1ல்?
Jr.NTR: பற்றி எரியும் ஜூனியர் என்டிஆர்... கதறும் ரசிகர்கள்... என்ன நடக்கிறது தேவாரா-1ல்?

இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், முதல்முறையாக நேரடியாக தென்னிந்த திரைப்படத்தில் நடத்துள்ளார். இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் தேவாரா திரைப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்த கட் அவுட் ஒன்றை ரசிகர்கள் தீ வைத்து கொளுத்தியதாகத் தெரிகிறது.

தேவாரா-1

உலக அளவில் தனக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆரின் 30ஆவது திரைப்படம் தேவாரா-1. தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநரான கொரட்டல சிவா இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டது. இதனால், ஜூனியர் என்டிஆரின் தேவாரா திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதிக அளவில் ஹைப் ஏற்பட்டது. அதுவும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றதால், இந்தப் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதுமட்டுமின்றி, சமீப காலங்களில் நடிகர் ஜூனியர் என்டிஆர் பிற நடிகர்களுடன் இணைந்தே படம் நடித்து வந்தார். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்து இந்தப் படம் வெளியாக உள்ளதால் இந்தப் படம் மேலும் கூடுதல் வரவேற்பை அவரது ரசிகர்களிடம் பெற்றது.

பரவிய வதந்தி

இந்த நிலையில் தான், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆர்டிசி சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஜூனியர் என்டிஆரின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் தீ வைத்ததாக தகவல் பரவியது. மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து இந்தப் படத்தை ரசிகர்கள் காண வந்ததாகவும், படம் முற்றிலும் அவர்களது எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டதாகவும் அதனால் மனமுடைந்து இவ்வாறு செய்துவிட்டதாகவும் தகவல் பரவியது.

கட் அவுட்டிற்கு தீ

பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில், தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள், படம் பார்க்கும் முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பட்டாசு வெடித்து வந்தனர். அப்போது, தீப்பொறி அங்கு ஜூனியர் என்டிஆருக்கு வைக்கப்பட்டிருந்த 60 அடி கட் அவுட்டில் பற்றியதாகவும், அதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிந்தது.

பின், அச்சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்ததால், ரசிகர்கள் யாரும் காயமின்றி தப்பியதாக கூறியுள்ளனர். இந்நிலையில், கட்அவுட் தீப்பிடித்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பலியான ஆடு

முன்னதாக, ஒரு திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள், தேவரா படம் வெற்றி பெற திரையரங்கத்தின் வாசலில் ஆட்டை வெட்டி பலியிட்டனர். பின், வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தத்தை தேவாரா பட பேனரில் பீய்ச்சி அடித்தனர்.

ரசிகர்களின் இதுபோன்ற கொண்டாட்டங்களினால், தேவாரா திரைப்படம் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இருப்பினும், இந்தப் படத்திற்கு அளித்த ஹைப்பின் காரணமாக படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் இந்தப் படம் 77 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.