Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள்!-journalist vithagan sekhar interviewed about comedy actor who played a role in the life of the glamour actress - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள்!

Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள்!

Marimuthu M HT Tamil
Sep 10, 2024 05:03 PM IST

Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வித்தகன் சேகர் அளித்த பேட்டி கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள்!
Glamour Actress: கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட உச்ச நடிகர்.. விடாமல் தவித்து வரும் நடிகைகள்!

இதுதொடர்பாக திரைக்கூத்து யூட்யூப் சேனலுக்கு சினிமா பத்திரிகையாளர் வித்தகன் சேகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ஒரு காலத்தில் குத்துப் பாடல்கள் என்றால், ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு என்றே சில நடிகைகள் இருந்தார்கள். ஜோதி லட்சுமி, விஜய் நர்மதா, ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி இதுபோன்று பல நடிகைகள். இவர்களுக்கான வாய்ப்புகள் என்பது சமீப காலமாக வெகுவாக குறைந்துவிட்டது. இதற்குக் காரணம், கதாநாயகிகளே குத்தாட்டம்போட்டு விடுகிறார்கள். ஆடைக்குறைப்பதில் கதாநாயகிகளே இறங்கிவிடுவதால், அந்த கவர்ச்சி நடிகைக்கு என்று இருந்த மார்க்கெட் போய்விட்டது. உதாரணத்திற்கு, ஜென்டில்மேன் என்னும் ஷங்கர் படத்தில் கவுதமி, யூத் படத்தில் சிம்ரன், ஷாஜகான் படத்தில் மீனா, சித்திரம் பேசுதடி படத்தில் மாளவிகா, அண்மையில் வெளிவந்த ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா இதுபோன்ற தாங்கள் ஹீரோயினாக நடிக்காத படத்தில்கூட, வந்து ஒரு குத்தாட்டம் மட்டும்போட்டுவிட்டுப்போகின்ற ஹீரோயின்கள், சுமார் 15 - 20 ஆண்டுகளில் அதிகரித்துவிட்டார்கள். இதுமட்டுமில்லாமல், நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, சோனியா அகர்வால், காஜல் அகர்வால் போன்ற பல கதாநாயகிகள், தாங்கள் ஹீரோயினாக நடிக்கும் படங்களிலேயே ஆடைகுறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, நடனங்கள் ஆடிவருகின்றார்கள். இதன்காரணமாக, மார்க்கெட்டை இழந்த கவர்ச்சி நடிகைகள் என்ன செய்கிறார்கள் என விசாரித்தபோது, கிடைத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். 

அந்த காலத்தில் பிரபல ஐட்டம் டான்ஸ் நடிகை அனுராதா, தற்போது டிவி சீரியல்களில் அம்மாவாகவும், மாமியாராகவும்,வில்லியாகவும் நடித்துவருகிறார். அவரது மகள் அபிநயஸ்ரீ, அவரும் அவரது அம்மாவைப் போலவே, ஐட்டம் டான்ஸராக இருந்தவர் தான். அவர் இப்போது ஒரு நடனப்பள்ளியைச் சொந்தமாக நடத்திவருகிறார். 

டிஸ்கோ சாந்திக்கு ஆன இக்கட்டான சூழல்:

எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக விளங்கிய கதாநாயகன் சி.எல்.ஆனந்தின் மகள், டிஸ்கோ சாந்தி. அவர், முந்தைய காலகட்டத்தில் ஐட்டம் டான்ஸ் நடிகையாக இருந்தவர். ஒரு கட்டத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டு, நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார். குடும்பம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஸ்ரீஹரி வசதியானவர் தான். ஆனால், திடீரென்று ஸ்ரீஹரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மறைந்துபோனார். அவர் உயிருடன் இருந்தபோது, பலபேருக்குக் கடன் தந்து உதவியிருக்கிறார். அவரின் இறப்பினைத்தொடர்ந்து, ஸ்ரீஹரிக்குக் கடன் தரவேண்டியவர்கள் தராமல், டிஸ்கோ சாந்தியை ஏமாற்றிவிட்டிருக்கிறார்கள். 

ஒருபுறம் சம்பாதித்துக்கொண்டிருந்த கணவரும் இறந்துவிட்டார். மறுபுறம், கடன்கொடுத்தவர்களும் ஏமாற்றிவிட்டார்கள். இதனால், காருக்கான ஈ.எம்.ஐ கூட கட்டமுடியாதநிலையில், டிஸ்கோ சாந்தியின் காரை வங்கி திரும்ப எடுத்துக்கொண்டது. இப்போது, இரண்டு சொந்தவீடுகளை வாடகைக்குவிட்டு, அதில் கிடைக்கும்பணத்தில் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார், டிஸ்கோ சாந்தி. 

தான் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது, தன்னுடன் பழகிய சினிமாக்காரர்கள் யாரும்கூட இன்றைக்குத் தான் உயிரோடுதான் இருக்கிறேனா என போன் செய்து விசாரிப்பதில்லை என வருத்தப்படுகிறார், டிஸ்கோ சாந்தி. 

கவுண்டமணியால் வாழ்விழந்து தவித்த நடிகை:

கவர்ச்சி நடிகை ஷர்மிலி, கவுண்டமணியுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தன்னுடன் மட்டுமே ஷர்மிலி நடிக்கவேண்டும் என கவுண்டமணி சில தந்திரங்கள் செய்த காரணத்தினால், தனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஷர்மிலி குற்றம்சாட்டியிருந்தார். 

மேலும், ஷர்மிலி, 40 வயது வரை திருமணம் ஆகாமல் தான் இருந்திருக்கிறார். அதன்பின்னர் தான், ஒரு ஐ.டி.ஊழியரை திருமணம் செய்திருக்கிறார். தன்னுடைய 48ஆவது வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக, அதாவது 2023ஆம் ஆண்டில் பேட்டியொன்றில் தெரிவித்து இருந்தார், நடிகை ஷர்மிலி. இப்போது தனது 49ஆவது வயதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாகி இருக்கக் கூடும், ஷர்மிலி. 

கவர்ச்சி நடிகை சோனா, எல்லா படங்களிலும் கவர்ச்சிபாணியில் மட்டுமே நடித்து வந்திருந்தார். ஒரு கட்டத்தில் தான், கிளாமர் ரோலில் நடிப்பதால், நல்ல வாய்ப்புகள் வரவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறார். அப்படியான கதாபாத்திரத்தில் தேடியும் இருக்கிறார். இப்போது தன்னுடைய சொந்தக் கதையை ஒரு வெப் சீரிஸாக தானே டைரக்ட் செய்துவருகிறார். அந்த வெப் சீரிஸின் பெயர், Smoke. 

கவர்ச்சி நடிகைக்கு பாடல் தந்த பிரேக்:

லாலா கடை சாந்தி பாடல் மூலம் பிரபலமான நடிகை ரிஷா ஜேக்கப், படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார். மேலும், இவர்களில் சிலர் இதனை ஐட்டம் டான்ஸ் என சொல்லாமல், சோலோ டான்ஸ் என்று சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். பத்துபேர் புடை சூழ ஆள்வதை எப்படி சோலோ டான்ஸ் எனச் சொல்லுவது என்று தெரியவில்லை.  இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், துக்ளக் தர்பார் படத்தில் நல்ல ரோலில் நடித்திருப்பார். அப்போதைய படவிழாவில் நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் எனக் கூறியிருப்பார். ஆனால், அவர்மீது விழுந்த அந்த கிளாமர் இமேஜ் மறையாததால் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

நடிகை சுஜா வருணி. இவரும் ஐட்டம் டான்ஸராக இருந்தவர். ஒரு கட்டத்தில் நடிகர் திலகம், சிவாஜி கணேசனின் பேரனை, ராம் குமாரி மகனை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்,சுஜா வருணி. 

கவர்ச்சி நடிகை எனப் பெயர் எடுத்தவர், ஷகிலா. மலையாளப் படங்களில் அவரது படத்துக்கு ஏற்பட்ட கிராக்கி காரணமாக, அவர் சினிமாவின் தரத்தைக் குறைப்பதாக மலையாள ஹீரோக்கள் புகார் செய்தனர். அதையடுத்து அவர் சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். அதன்பின் பிரபல யூட்யூப் சேனல் தொகுப்பாளினியாகப் புகழ்பெற்று பிரபலங்களைப் பேட்டி எடுத்து, தன் பழைய இமேஜை போக்குகின்ற வகையில், உண்மையான ஆங்கராக செயல்பட்டுவருகிறார், நடிகை ஷகிலா’’என்றார், சினிமா பத்திரிகையாளர் வித்தகன் சேகர். 

நன்றி: திரைக்கூத்து

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.