Disco Shanti: அவர் படு செக்ஸிதான்; அசிங்கம் கிடையாது! - சில்க்கை நினைத்து உருகிய டிஸ்கோ சாந்தி!
சில்க் ஸ்மிதாவின் மறுமக்கம் குறித்து நடிகை டிஸ்கோ சாந்தி பகிர்ந்தவற்றை இங்கு பார்க்கலாம்.

“எனக்குத் தெரிந்து சினிமாவில் ஜெயமாலினி போல இன்னொரு டான்சர் வர முடியாது. சில்க் ஸ்மிதாவிற்கு டான்சே வராது. ஆனால் அவரிடம் இருக்கும் கிரேஸ், அவர் வெளிப்படுத்தும் முக பாவனைகள் உள்ளிட்டவை வேறு நடிகைகளுக்கு வரவே வராது. ஸ்ரீதேவியை விடவா ஒருவர் ஸ்டைல் பண்ணி விட முடியும். சில்க் ஸ்மிதாவிடம் செக்ஸியான தோற்றம் மட்டுமே நமது கண்ணுக்கு தெரியும். ஆபாசம் நமக்கு தெரியாது.
உடல்வாக்கும் அதற்கு ஏற்றார் போல இருந்தது. அவரிடம் ஒரு நல்ல வசீகரம் இருக்கும். அவரை அசிங்கமாக பார்க்கத் தோன்றாது. சில்க் ஸ்மிதா உடன் அவர் தயாரித்த சொந்த படங்களில் நடித்தேன். என்னை அவர் ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்வார். அப்போது சில்க்கிற்கு அடுத்ததாக அனுராதா இருந்தார். அவருக்கு அடுத்து அனுராதாவிற்கு அடுத்து நான்.
அனுராதா சில்க் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் நடனமாடியிருந்தாள். ஆனால் நான் அவருடைய படத்தில் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சிறிய குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்வார். காலையில் வரும் போது அவர் சாக்லேட்களை எடுத்து வருவார்.
