இர்ஃபான் அடுத்தடுத்து செய்த பெரும்தவறுகள்.. துணைபோகிறதா காவல் துறை.. நடப்பது என்ன.. பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டி
இர்ஃபான் அடுத்தடுத்து செய்த பெரும்தவறுகள்.. துணைபோகிறதா காவல் துறை.. நடப்பது என்ன.. பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.

இர்ஃபான் அடுத்தடுத்து செய்த பெரும்தவறுகள் குறித்தும்; அதற்கு துணைபோகிறதா காவல் துறை என்பது பற்றியும், நடப்பது என்ன என்பது பற்றியும் பத்திரிகையாளர் பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இர்ஃபானை பொறுத்தவரை ஆளும்கட்சியின் செல்லம். ஆளுங்கட்சி தான் இவரது எல்லாத் தவறுக்கும் காரணம். முதல் நிகழ்வு, அவரே எல்லா சுங்கச் சாவடிகளிலும் கார் ஓட்டிக்கொண்டு அவரே வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார். அப்போது மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு வரும்போது, வண்டி ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார்.
அப்போது பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு செய்யும் ஒரு வயதான மூதாட்டி, அந்தம்மா ஸ்பாட்டிலேயே அவரது கார் மோதி அடிபட்டு இறந்துவிடுகிறார். அப்போது மக்கள் எல்லோரும் துரத்துறாங்க. அந்தம்மாவை மருத்துவமனையில் சேர்த்து இருக்கணும். ஆனால் அங்கு அவர் நிற்கக் கூட இல்லை. காரை எடுக்கல. ஏனென்றால், மக்கள் தடுத்து நிறுத்திட்டாங்க. உடனே, வேறு காரில் ஏறி சென்றுவிட்டார்.