நயன்தாரா பிறந்தநாளிற்கு வரப்போகும் ட்ரீட்! இனி வெயிட்டிங் ஓவர்! ஓடிடியில் வெளியாகும் விக்கி நயன் திருமண வீடியோ!
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடந்தது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடந்தது.இந்த திருமண விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் வரை பல நட்சத்திரங்கள் வந்திருந்தனர் இந்நிலையில் இவர்களது திருமண வீடியோ இரண்டு வருடங்களுக்கு பின்னர் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தார். படப்பிடிப்பு தளத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் காதலித்தவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அதே ஆண்டில் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர் அவர்கள் இருவருக்கும் உயிர் மற்றும் உலக் என பெயரும் வைத்தனர்.
இவர்களது திருமண வீடியோ ஓடிடி தளத்தில் தற்போது வெளியாக உள்ளது. திருமணம் நடந்து முடிந்த பொழுதே Nayanthara Beyond the Fairy Tales என்கிற தலைப்பில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக திருமண வீடியோ வெளியாக இருந்தது. இருப்பினும் திருமண புகைப்படங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டதாக கூறி நெட்பிளிக்ஸ் குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளையும் சமூகமாக முடித்து வரும் நவம்பர் 18 அதாவது நயன்தாராவின் பிறந்தநாள் அன்று இந்த வீடியோ தளத்தில் வெளியாக உள்ளது.