Kiran Rathod: கடனில் தவித்த நடிகை கிரண்..நண்பர்களே படுக்கைக்கு அழைத்த சோகம்..இப்படியும் ஒரு பரிதாப நிலைமையா?
Actress Kiran Rathod: தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை கிரண் ரத்தோர் பற்றி ஒரு தகவல் பரவலாக பேசப்படுகிறது. அதுபற்றி பிரபல பத்திரிகையாளர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

Actress Kiran Rathod: தமிழ் திரையுலகில் 'ஜெமினி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரண் ரத்தோர். விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தை சரண் இயக்கி இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு ஜெமினி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றி இருந்தது. முதல் படமே ஹிட்டானதால் கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது.
தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான 'அன்பே சிவம்', அஜித்துக்கு ஜோடியாக 'வில்லன், பிரசாந்த்துடன் 'வின்னர்' போன்ற படங்களில் கமிட்டாகி கவர்ச்சியுடன், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார். இதனிடையே, இந்தி, மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து சரத்குமார், அர்ஜுன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் விஜயகாந்துக்கு ஜோடியாக 'தென்னவன்' என்ற படத்திலும் இடையே, சில படங்களில் குத்தாட்டமும் போட்டு வந்தார் நடிகை கிரண்.
சரிந்த மார்க்கெட்
ஒரு கட்டத்திற்கு பிறகு மார்க்கெட் சரிந்ததை அடுத்து தளபதி விஜய்யின் கமர்ஷியல் ஹிட்டான 'திருமலை' படத்தில் 'வாடியம்மா ஜக்கம்மா' என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். எஸ்.ஜே சூர்யாவின் 'நியூ' படத்தில் மாமி கதாபாத்திரத்தில் சிறிய கேரக்டரில் தோன்றிய கிரண் டபுள் மீனிங் வசனம், கவர்ச்சி என விருந்து படைத்திருப்பார். 'மார்கண்டேயா நீ வருவாய' என்று அந்த படத்தில் இடம்பெறும் பாடலில் பல ஷாட்கள் சென்சாரின் கத்தரிகளுக்கு இறையாகும் விதமாக தாராளம் காட்டியிருப்பார் நடிகை கிரண்.