Bayilvan: 2 தமிழ் இயக்குநர்களுக்கு இருந்த பாடி டிமாண்ட்.. அட்ஜெஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் இருக்கு: பயில்வான் ரங்கநாதன்
Bayilvan: 2 தமிழ் இயக்குநர்களுக்கு இருந்த பாடி டிமாண்ட் குறித்தும், அட்ஜெஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் இருக்கு என்பது குறித்தும் மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: 2 தமிழ் இயக்குநர்களுக்கு இருந்த பாடி டிமாண்ட் குறித்தும், அட்ஜெஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்பது குறித்தும் மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில்,'' நடிகை ஹேமா கமிட்டியில் இருந்த நடிகை சாரதா சொன்னது, ஹேமா கமிட்டி என்பது ஒரு ஷோ என்று மட்டும் தான். இதனால் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது. சும்மா ஒரு விளம்பரம். என்னைப் பற்றி எத்தனைபேர் பேசினாங்க. நான் துவண்டுபோகலையே. இப்போது அவர்களே தங்கள் பெட்ரூம் பத்தி பேசுறாங்க.
மூத்த நடிகை ஷர்மிளா மலையாளப்படத்தில் நடிக்க முயற்சிக்கும்போது இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மூணுபேருமே கூட்டுப் பாலியல் பலாத்காரம் பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க. இது அவர்களது அக்காவுக்கும் நடந்திருக்கு. இதை அவர்களே சொல்லியிருக்காங்க. அப்போது இது எவ்வளவு தரக்குறைவான விஷயம்.