Thalapathy vijay: பவன் கல்யாண் வைத்த செக்..பிடிவாதமாக நின்ற விஜய்..கெஞ்சி கதறிய சங்கீதா!- ஹீசைனி
shinhan hussaini: ஒரு சில வண்டிகள், விஜயின் மணிக்கட்டிலும் ஏறிருக்கும். அதனை அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு செய்தார். அதை அவர் மிகவும் பிடிவாதமாக செய்ய வேண்டும் என்று செய்தார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜயின் மனைவியான சங்கீதாவும் இருந்தார். - ஹீசைனி
(1 / 6)
Thalapathy vijay: பவன் கல்யாண் வைத்த செக்..பிடிவாதமாக நின்ற விஜய்..கெஞ்சி கதறிய சங்கீதா!- ஹீசைனி
(2 / 6)
பிரபல கராத்தே மாஸ்டரான ஹீசைனி Reflect talks யூடியூப் சேனலில் விஜயுடன் பத்ரி படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். பவன் கல்யாண் கொடுத்த அர்ப்பணிப்பு இது குறித்து அவர் பேசும் போது, “ விஜய் பத்தி கேட்கும் பொழுது, எனக்கு இன்னொருவர் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் பவன் கல்யாண். பவன் கல்யாணும் என்னுடைய மாணவர்தான். நான் அப்போது கராத்தே சொல்லிக் கொடுப்பதை முழுவதுமாக நிறுத்தி இருந்தேன். அந்த சமயத்தில்தான் பவன் கல்யாண், என்னிடம் வந்து கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அவரிடம் நான் மிகவும் கறாராக, நான் இப்போது கராத்தே சொல்லிக் கொடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் அவரிடம் நான் எவ்வளவோ கூறியும், ஒரு மாதம் என்னை தினமும் வந்து பார்த்தார். ஒரு கட்டத்தில் எனக்கே அவர் மீது இரக்கம் வந்துவிட்டது. இதனையடுத்து நான் அவரை என்னுடைய மாணவராக ஏற்றுக் கொண்டேன்.
(3 / 6)
ஒரு வருடத்தில் பிளாக் பெல்ட்கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் என்னோடு பயணித்தார். எனக்கு தினமும் டீ போட்டுக் கொடுப்பார். சமையல் தொடர்பான இடங்களை சுத்தம் செய்வார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகுதான், அவர் சிரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரர் என்பது எனக்குத் தெரியும். இறுதியில் அவர் பிளாக் பெல்ட் வாங்கினார்.
(4 / 6)
அதன் பின்னர் அவர் ஒரு படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் அவர் கைகள் மீது லாரி டயர்கள் ஏறுவது போன்ற காட்சி இருக்கும். அந்த படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார்கள். அதில் ஹீரோவாக விஜயை கமிட் செய்தார்கள். அந்த திரைப்படம்தான் பத்ரி. விஜய் படத்தில் கமிட்டாகும் பொழுதே, கல்யாண் உண்மையில் செய்த அந்த சாகசத்தை, நானும் உண்மையில் செய்ய வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டார்.
(5 / 6)
பிடிவாதமாக நின்ற விஜய்இதையடுத்து படக்குழுவினர் என்னை வந்து அணுகினார்கள். நிறைய பணம் தந்தார்கள். இதனையடுத்து நான் விஜய்க்கு பயிற்சி கொடுத்தேன். அந்த காட்சியை ஹைதராபாத்தில் வைத்து ஷூட் செய்தோம். உண்மையாக பார்த்தால், கை விரல்களின் மீதுதான் வண்டியின் டயர்கள் ஏற வேண்டும்.
(6 / 6)
ஆனால், ஒரு சில வண்டிகள், விஜயின் மணிக்கட்டிலும் ஏறிருக்கும். அதனை அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு செய்தார். அதை அவர் மிகவும் பிடிவாதமாக செய்ய வேண்டும் என்று செய்தார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜயின் மனைவியான சங்கீதாவும் இருந்தார்.அவரும் இது வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், என்னிடமும் சொல்லச் சொன்னார். ஆனால் விஜய் கடைசிவரை பிடிவாதமாக இருந்து, அந்த காட்சியில் நடித்தார்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்