Vijay: வாய்ப்பு இல்லை ராஜா.. தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்-journalist anthanan speech that the tamilaga vetri kazhagam will not take place - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: வாய்ப்பு இல்லை ராஜா.. தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்

Vijay: வாய்ப்பு இல்லை ராஜா.. தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்

Marimuthu M HT Tamil
Sep 23, 2024 03:59 PM IST

Vijay: தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்.. ஒரு வேளை அதுவா இருக்குமோ?

Vijay: வாய்ப்பு இல்லை ராஜா.. தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்
Vijay: வாய்ப்பு இல்லை ராஜா.. தமிழக வெற்றிக்கழக மாநாடு நடக்காது - அடித்துச் சொல்லும் பத்திரிகையாளர் அந்தணன்

இதுதொடர்பாக தமிழ்நாடு டைம்ஸ் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் லப்பர் பந்து படம் பிடிச்சிருந்தது. லைவ் ஆக இருந்துச்சு, பேமிலி சென்டிமென்ட் இருந்துச்சு, தொய்வில்லாத ஸ்கிரீன்பிளே, வசனங்கள் அருமை. நான் சமீபத்தில் பார்த்த படங்களில் கொண்டாடப்பட வேண்டிய சினிமா இது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, இவ்வளவு ரிஸ்க்காக ஏன் படம் எடுத்தார்னு தெரியல. கிராஃபிக்ஸ் மோசமாகத்தான் இருக்கு. ஏன் இவ்வளவு பண்ணி இந்தப் படத்தைப் பண்ணினார்னு தெரியல. பாவம், அது எப்படி மீளப்போறார்னு தெரியல. நந்தன் படம் பார்த்தேன். கதை ஓ.கே. ஆனால், சொல்லப்பட்ட விதம், ஒரு டாக்குமென்ட்ரியா இருக்கு. இப்படத்தில் திரைமொழி இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அயற்சி வருகிறது.

சிவகார்த்திகேயனின் நல்லமனசு: அந்தணன்

நந்தன் படம் மாதிரியான படங்களை வெளியில் சொல்லணும்னு சிவகார்த்திகேயன் நினைக்குறார். சாதிப் பிரச்னைகள் பற்றி பேசுவதால், மிதமிஞ்சிய விமர்சனத்தை சிவகார்த்திகேயன் கொடுக்கிறார். அது அவரோட நல்லமனசு. சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர், இன்னொருவரின் படம் குறித்துப்பேசியிருப்பது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். நிஜமாக சிவகார்த்திகேயனுக்கு சல்யூட் போடணும்.

சன்னி லியோன் பேட்ட ராப் படத்துக்கு வருவது என்பது பணம்வாங்கிட்டுத்தான் வர்றாங்க. அதில் அவங்க பேசுறது, படத்துக்கு விளம்பரமாகுது.

ஜெயம் ரவியும் - ஆர்த்தியும் ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து இருக்காங்கன்றது தெரியுது. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒருவரை ஒருவர் ஆர்த்தியும் ஜெயம் ரவியும் புகழ்ந்து பேசிக்குறாங்க, ஆனால், நிஜத்தில் அப்படியில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்கள் மத்தியில் பேசியதைத்தாண்டி, அவர்களுக்கு வேறு ஒரு முகம் இருக்கிறது. ஏற்கனவே, வக்கீல் நோட்டீஸ் கொடுத்ததை ஒருத்தர் ஆர்த்தி வீட்டில் போய் கொடுக்கிறார். அதை நாங்கள் முன்னறே வலைப்பேச்சுவில் சொல்லியிருந்தோம். இதில் இரண்டு தரப்புமே பொய் சொல்லிட்டு இருக்காங்க. ஜெயம் ரவியும் பொய் சொல்றார். வாழு வாழவிடுன்னு சொல்றார்ல. அவருக்கு சொல்றது, மனைவியோடு வாழு மனைவியை வாழவிடு அப்படிங்கிறது தான்.

ஜெயம் ரவி - கெனிஷா நட்பு ஆர்த்திக்கு முன்பு தெரியாது: அந்தணன்

ஜெயம் ரவி, கெனிஷாவின் நட்பை ஆர்த்தியிடம் மறைத்து இருக்கிறார். பலருக்கு முன், நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து ஹீலிங் சென்ட்டர் ஆரம்பிக்கப்போறதா சொல்றார் இல்லையா, இதை அவர் மனைவிகிட்ட சொல்லல.

உங்கள் மனசில் அழுக்கு இல்லையென்றால், அந்தப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துப்போய், தோழின்னு அறிமுகப்படுத்தியிருக்கலாம் இல்லையா. அவங்க குணாதிசயங்களை எல்லாம் சொல்லி, 6ஆயிரம் ஷோக்கள் மேல் செய்திருக்காங்கன்றதை சொல்லி, இரண்டுபேரும் சேர்ந்து ஹீலிங் செண்ட்டர் ஆரம்பிக்கிறதை சொல்லியிருக்கலாம் இல்லையா. கெனிஷாவுக்கும் ஜெயம் ரவிக்கும் நட்பு இருப்பதைக் கண்டுபிடித்ததே ஆர்த்தி தான்.

ஆனால், அவங்க ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கிட்ட போய், நிறைய செலவுபண்ணி, ஜெயம் ரவியை கோவாவில் இருக்கும்போது பிடிக்குறாங்க. அதனால் யார் சொல்றது சரி, யார் சொல்றது தவறு என்பதை புரிந்துகொள்ளணும். இவங்க சொல்றது உண்மை என்றும் அவங்க சொல்றது பொய் என்றும் எடுத்துக்கொள்ளமுடியாது.

அக்டோபர் 27ஆம் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு தடங்கல் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஒரு முதல் மாநாடு ஒருவர் நடத்துகிறார். கொஞ்சம் யோசிக்கணும். இல்லையென்றால் காலண்டரைப் பார்க்கணும். தீபாவளிக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி மாநாடு வைத்தால், எல்லோரும் குடும்பத்தோடு ஊருக்குப்போய் தீபாவளி கொண்டாடுவானா, இல்லை, உங்கள் மாநாட்டுக்கு வந்து நிற்பானா. கையில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தோடு செலவு செய்யணும்னு தான் எல்லோரும் நினைப்பாங்க. மாநாடு போகணும்னு நினைக்கமாட்டாங்க. மேலும் விக்கிரவாண்டி சாலை பொதுப்போக்குவரத்தில் முக்கியமான சாலை அது. அந்த சாலையில் பண்டிகை காலத்தில் அவ்வளவு நெரிசல் இருக்கும்.

மழை சீசன் வேற. ஆலோசனை யாரையும் சொல்லவிடமாட்றீங்கான்னு நினைக்குறேன். ஒரு வேளை யார்கிட்டாயவது ஆலோசனை கேட்டிருந்தால் உண்மையைச் சொல்லியிருப்பாங்க'' என்றார், பத்திரிகையாளர் அந்தணன்.

நன்றி: தமிழ்நாடு டைம்ஸ் யூட்யூப்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.