விஜய் சேதுபதி செய்த அருவருப்பான செயல்.. பெரிய ஹீரோ யாரும் இதைச் செய்யல.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி
விஜய் சேதுபதி செய்த அருவருப்பான செயல்.. பெரிய ஹீரோ யாரும் இதைச் செய்யல.. பத்திரிகையாளர் அந்தணன் பேட்டியளித்துள்ளார்.

விடுதலை 2 இசைவெளியீட்டு விழாவில் நடந்த சில செயல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அந்தணன் மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’விடுதலை 2 படத்தின் ட்ரெய்லர் பிரமாதமான ட்ரெய்லர். இந்தப் படத்தில் பேசுறவங்க குறிப்பு எடுத்துட்டு வருவாங்க. அப்படியும் சிலர் பெயரை விட்ருவாங்க. இப்படத்தை நிறைய நாட்கள் எடுத்திருக்காங்க. கிட்டத்தட்ட 450 பேர் வொர்க் செய்திருக்காங்க. அதில் இவ்வளவு நாள் டிராவல் செய்தவங்க, நமக்கான அங்கீகாரம், இந்த மேடையில் கிடைக்கணும்னு நினைப்பாங்க. அப்போது சொல்லும்போது சில பெயரை விட்டுட்டாங்க என்றால் வருத்தம் வரும். அப்போது வெற்றிமாறன், மஞ்சு வாரியர் பெயரை விட்டவுடனே, பக்கத்தில் இருக்கிறவங்க சொல்லிக்கொடுக்கிறாங்க.
உடனே, மஞ்சுவாரியர் பெயரை வெற்றிமாறன் சொல்கிறார். உடனே கொஞ்சநேரம் கழித்து, உதவி இயக்குநர்கள் பெயரை மொத்தமாக சொல்லிட்டுப்போறார். அதில் சில பேர் பெயரைச் சொல்லலாம் என பக்கத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். உடனே, எல்லார் பெயரையும் சொல்லிட்டேன்ல என மூட் அவுட் ஆகி போகிறார், வெற்றிமாறன்.
