பூசி மொழுகும் போட்டியாளர்கள்! புரட்டி எடுக்கு விஜய் சேதுபதி! பிக்பாஸில் இன்று!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 22 ஆவது நாளான இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் 6 அன்று தொடங்கியது. தொடங்கிய முதல் நாளில் இருந்து சண்டைக்கும், சச்சரவுக்கும் சற்றும் பஞ்சம் இல்லாத வகையில் இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 22 ஆவது நாளான இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி சரமாரியாக கேள்வி கேட்கிறார்.கடந்த வாரம் நடந்த ஹோட்டல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக கேள்விகளை கேட்கிறார். அதற்கு நேரடியாக பதில் கூறாமல் போட்டியாளர்கள் மழுப்பும் வகையில் பதில் அளிக்கின்றனர்.
தனிநபர் தாக்குதல்
பிக்பாஸில் தற்போது மூன்றாவது வார இறுதி வந்து விட்டது. ஆனால் கடந்த மூன்று வாரங்களாக ஒரு நூறு நாள் பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அரங்கேற்றி விட்டன. இந்நிலையில் இந்த வார நாட்களில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் எனும் ஒரு டாஸ்க்கை கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் தான் தனி நபரை குறி வைத்து எதிரணிகள் விளையாடியதாக விஜய் சேதுபதி கூறுகிறார். இந்த டாஸ்க்கில் முதலில் பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாகவும், ஆண்கள் அணியினர் வாடிக்கையாளர்களாகவும் விளையாடினர். இதில் பவித்ரா ஹோட்டல் மேனேஜர் ஆக விளையாடினார்.
பவித்ராவை குறி வைத்து ஆண்கள் அணியினர் குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரை மேனேஜர் என்ற இடத்தில் இருந்து விளக்குவதையே நோக்கமாக வைத்து விளையாடினார். மேலும் ஆண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக விளையாடிய போது மேனேஜர் ஆக இருந்த முத்துவை பெண்கள் அணி குறி வைத்து விரட்டினர். மேலும் சௌந்தர்யா மேனேஜர் ஆக இருந்த போதும் இதே நிகழ்ந்தது.
