19 Years Of Daas: ஜெயம் ரவி - ரேணுகா மேனன் ரொமான்ஸில் மிளிர்ந்த தாஸ்.. இசையில் சிக்ஸர் அடித்த யுவன் சங்கர் ராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  19 Years Of Daas: ஜெயம் ரவி - ரேணுகா மேனன் ரொமான்ஸில் மிளிர்ந்த தாஸ்.. இசையில் சிக்ஸர் அடித்த யுவன் சங்கர் ராஜா

19 Years Of Daas: ஜெயம் ரவி - ரேணுகா மேனன் ரொமான்ஸில் மிளிர்ந்த தாஸ்.. இசையில் சிக்ஸர் அடித்த யுவன் சங்கர் ராஜா

Marimuthu M HT Tamil
Jul 29, 2024 07:44 AM IST

19 Years Of Daas: ஜெயம் ரவி - ரேணுகா மேனன் ரொமான்ஸில் மிளிர்ந்த தாஸ் திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இப்படத்தில் இசையில் யுவன் சங்கர் ராஜா சிக்ஸர் அடித்துள்ளார்.

19 Years Of Daas: ஜெயம் ரவி, ரேணுகா மேனன் ரொமான்ஸில் மிளிர்ந்த தாஸ்.. இசையில் சிக்ஸர் அடித்த யுவன் சங்கர் ராஜா
19 Years Of Daas: ஜெயம் ரவி, ரேணுகா மேனன் ரொமான்ஸில் மிளிர்ந்த தாஸ்.. இசையில் சிக்ஸர் அடித்த யுவன் சங்கர் ராஜா

தாஸ் திரைப்படத்தின் கதை என்ன?: 

திருநெல்வேலி மாவட்டத்தில்,உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஊர் தலைவராக இருப்பவர், அண்ணாச்சி. அந்த கிராமத்தில் நடக்கும் தேர் திருவிழாவை, ஆண்டனி தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் பல எதிர்ப்புகளைத் தாண்டி தங்களது சேரிக்குள் இழுத்துச் செல்கின்றனர். இதனால், ஊர் தலைவர் அண்ணாச்சிக்கு ஆண்டனி தாஸ் மீது கோபம் வருகிறது. அதனைப் பழி தீர்க்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கிறார். ஆனால், அண்ணாச்சியின் மகள் ராஜேஸ்வரி, தாஸை காதலிக்கிறார். இதற்கிடையே அவளது சகோதரி புனிதா, தாஸின் வகுப்புத் தோழனான குணா என்ற பட்டியல் இனப்பையனை காதலித்து திருமணம் செய்துகொள்ள ஓடிவிடுகிறாள். இறுதியில், அண்ணாச்சி தன் உயர் சாதி கவுரவம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, அடியாட்களை அனுப்பி, கொல்லமுயற்சிக்கிறார். அப்போது அவர்களைக் காப்பாற்றச் செல்லும் தாஸின் முன்னிலையில் இருவரையும் எரித்துக்கொன்றுவிடுகின்றனர், அண்ணாச்சியின் அடியாட்கள்.

அப்போது கடும்சினத்திற்குள்ளாகும் ராஜேஸ்வரி, தன் தந்தைக்குப் பாடம் கற்பிப்பேன் என்று சபதம் இடுகிறார். இதற்கிடையே ஆண்டனி தாஸுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையில் காதல் இன்னும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய மதுரைக்குச் செல்கின்றனர். அங்கு நசீரின் வீட்டில் தஞ்சம் அடைகின்றனர். நசீரும் நசீரின் தந்தையும் ராஜேஸ்வரிக்கும் ஆண்டனி தாஸுக்கும் திருமணம் செய்துவைப்பதாக உறுதியளிக்கிறார். இதை எப்படியோ மோப்பம் பிடித்து வரும் அண்ணாச்சியின் அடியாட்கள், மதுரையை அடைகின்றனர். நசீர் குடும்பத்தினர், ஆண்டனி தாஸ் - ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தனரா, அண்ணாச்சியின் அடியாட்கள் ஆண்டனி தாஸை தீர்த்துக்கட்டினரா என்பதே மீதிக்கதையாகும்!

தாஸ் படத்தில் நடித்தவர்கள் விவரம்:

தாஸ் படத்தில் ஆண்டனி தாஸாக ஜெயம் ரவியும், ராஜேஸ்வரியாக ரேணுகா மேனனும் நடித்திருந்தனர். ராஜேஸ்வரியின் அப்பாவாக அண்ணாச்சியாக சண்முகராஜனும், புனிதாவாக மோனிகாவும், நசீராக ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணாவும், குணாவாக அபினய்யும் நடித்து இருந்தனர். தவிர, கல்லூரி விடுதி வார்டனாக வடிவேலுவும், அமைச்சர் குருமூர்த்தியாக பிதாமகன் மகாதேவனும், டிசிபி சிவசுப்பிரமணியம் ஆக ஆஷிஷ் வித்யார்த்தியும் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர் ராஜாவின் மயக்கும் இசை:

தாஸ் படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்துக்கு இசையை யுவன்சங்கர் ராஜா சிறந்த முறையில் அமைத்து இருந்தார். மேலும், சாமிகிட்டே சொல்லிபுட்டேன் பாடலும், சக்கபோடு போட்டாளே சவுக்கு கண்ணாள ஆகியப் பாடல்கலும் பட்டித்தொட்டியெங்கும் வெற்றிபெற்றனர். சக்கபோடு போட்டாளே பாடலை விவேகாவும், சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் பாடலை பா.விஜயும் எழுதியிருந்தனர்.

படம் வெளியாகி 19ஆண்டுகள் ஆனாலும், படத்தை இப்போது டிவியில் போட்டாலும் பலரை அமர்ந்து ரசிப்பது இந்த ’தாஸ்’திரைப்படத்தினைப் பார்க்கும்போது நிகழும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.