Mutton Onion Curry : மதுரை ஸ்பெஷல் மட்டன் வெங்காயக்கறி; சாதம், டிபஃன் என அனைத்துக்கும் ஏற்றது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Onion Curry : மதுரை ஸ்பெஷல் மட்டன் வெங்காயக்கறி; சாதம், டிபஃன் என அனைத்துக்கும் ஏற்றது!

Mutton Onion Curry : மதுரை ஸ்பெஷல் மட்டன் வெங்காயக்கறி; சாதம், டிபஃன் என அனைத்துக்கும் ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Jul 18, 2024 09:53 AM IST

Mutton Onion Curry : மதுரை ஸ்பெஷல் மட்டன் வெங்காயக்கறி, சாதம், டிபஃன் என அனைத்துக்கும் ஏற்றது. கட்டாயம் முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Mutton Onion Curry : மதுரை ஸ்பெஷல் மட்டன் வெங்காயக்கறி; சாதம், டிபஃன் என அனைத்துக்கும் ஏற்றது!
Mutton Onion Curry : மதுரை ஸ்பெஷல் மட்டன் வெங்காயக்கறி; சாதம், டிபஃன் என அனைத்துக்கும் ஏற்றது!

கிராம்பு – 2

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

சின்ன வெங்காயம் – கால் கிலோ (தோல் உரித்தது)

பச்சை மிளகாய் – 4 அல்லது தேவையான அளவு

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மட்டன் கொத்துக்கறி – அரை கிலோ

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

குழம்பு மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் என முழு கரம் மசாலா சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். கறிவேப்பிலை ஒரு கொத்து தூவவேண்டும்.

பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் மட்டன் கொத்துக்கறியை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

உப்பு, குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் என அனைத்தையும்சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் குக்கர் விசில் நின்றவுடன், அதனை திறந்தால், மேலும் எண்ணெயிய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு எடுத்தால், மணமணக்கும், மட்டன் வெங்காயக்கறி தயார். இதை சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

சின்ன வெங்காயத்தை இதற்கு முழுதாக சேர்க்கவேண்டும். வதக்கும்போதும், பின்னர் குக்கரில் வைத்து வேகவைக்கும்போதும் சின்ன வெங்காயம் நன்றாக வதங்கி, மசிந்து வருவது இந்த மதுரை ஸ்பெஷல் மட்டன் வெங்காயக்கறியின் சுவையை அதிகரிக்கும்.

இதை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் கொத்துக்கறியில் செய்வதால், இது நன்றாக வெந்துவிடும். அதனால் அனைவரும் சாப்பிட ஏதுவாக இருக்கும்.

ஆட்டுக்கறி சில தகவல்கள்

மட்டனில் சாச்சுரேடட் கொழுப்பு குறைவாக உள்ளது.

இதில் அதிகளவில் உள்ள லினோலைக் அமிலம் என்ற கொழுப்பு அமிலம், அலர்ஜியை தடுக்கிறது.

இதில் அதிகளவில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்து உள்ளது.

இதை சரிவிகித உணவு உண்பவர்களும், ஆரோக்கிய வாழ்க்கை வாழ நினைப்பவர்களும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை வறுவல், குழம்பு, பேக் செய்து, சூப் செய்து என பல வழிகளில் சாப்பிடலாம். இதை போதிய தண்ணீர் வைத்து, மெதுவாக குறைவான தீயில் சமைத்தால், மிருதுவாக வெந்துவரும்.

இதில் குறைவாக கொழுப்பே உள்ளது. எனவே இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

சிலருக்கு ஆட்டு மூளை பிடிக்காது. ஆனால், அதில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இதில் உள்ள புரதச்சத்துக்கள் உங்கள் பசியை நீண்ட நேரம் கட்டுப்படுத்தி வைக்கும் திறன் கொண்டது. இதனால், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, உங்கள் உடல் எடை பராமரிக்க உதவுகிறது.

இதில் உள்ள புரதச்சத்து உடல் எலும்பை உற்பத்தி செய்ய உதவுகிறது. திசுக்களை சேதமாக்குகிறது. சருமம், தசைகள் மற்றும் ரத்தம் என அனைத்தின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

இதில் புரதம், ஆரோக்கிய கொழுப்பு, கலோரிகள் ஆகிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில் ஆட்டுக்கறி முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே ஆட்டு இறைச்சியை அடிக்கடி சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.