தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi Divorce: ஒரே சந்தேகம்.. ஆர்த்தியை, ஜெயம் ரவி விவாகரத்து செய்ய இது தான் காரணமா?

Jayam Ravi Divorce: ஒரே சந்தேகம்.. ஆர்த்தியை, ஜெயம் ரவி விவாகரத்து செய்ய இது தான் காரணமா?

Aarthi Balaji HT Tamil
Jul 09, 2024 12:15 PM IST

Jayam Ravi Divorce: ஜெயம் ரவி ரவி போனை எடுக்கவில்லை என்றால் ஆர்த்தி உடனே ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர் போன்ற ஒருவரைக் கூட விடமாட்டார் என பத்திரிகையாளர் அந்தணன் கூறினார்.

ஒரே சந்தேகம்.. ஆர்த்தியை, ஜெயம் ரவி விவாகரத்து செய்ய இது தான் காரணமா?
ஒரே சந்தேகம்.. ஆர்த்தியை, ஜெயம் ரவி விவாகரத்து செய்ய இது தான் காரணமா?

Jayam Ravi Divorce: சமீப காலமாக விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பார்கள் என்பதை பொறுத்தே நிலைமை மாறியுள்ளது. படத்தின் படப்பிடிப்பின் போது காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாமல் விவாகரத்து பெறுகிறார்கள். பல பிரபலங்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து?

அந்த வரிசையில் இப்போது புதியதாக விவாகரத்து செய்தி அடிப்பட்டு இருப்பவர்கள் தான் ஜெயம் ரவி - ஆர்த்தி. ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவியது.

ஜெயம் ரவி, ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து செல்வதாகவும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் இருவரும் இது தொடர்பாக பேசவே இல்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

பிரச்னை இல்லை

இந்நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக சினிமா பத்திரிகையாளர் அந்தணன் பிரபல யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.

”ஜெயம் ரவி தனது மாமியாரிடம் சம்பளம் கேட்பது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. உண்மையில் ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு எப்போதும் சந்தேகம். அதனால் ஆர்த்தி, ரவிக்கு எப்போதும் போன் செய்கிறார்.

நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட்

ஜெயம் ரவி ரவி போனை எடுக்கவில்லை என்றால் உடனே ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர் போன்ற ஒருவரைக் கூட விடமாட்டார். எல்லோரையும் அழைத்து ரவியைப் பற்றி விசாரிப்பார். ஒருவேளை யாரும் போனை எடுக்கவில்லை என்றால் நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விடுவார். அவுட்டோர் ஷூட்டிங் என்றால் கூட திடீரென்று அங்கேயே நின்றுவிடுவார்.

ஆர்த்திக்கு சந்தேகம்

ஜெயம் ரவியைத் தொடர்ந்து இது போல் செய்து வருவதால் இதை ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை, அதனால் தான் பிரச்னை ஆரம்பித்தது. ஜெயம் ரவி மேல் எப்போதுமே ஆர்த்திக்கு சந்தேகம் இருக்கிறது” என்றார்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.