RIP DilliBabu: ‘ராட்சசன்’ பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம்.. அதிர்ச்சியில் கோடம்பாக்கம்.. காரணம் என்ன தெரியுமா?
RIP DilliBabu: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்டில்லி பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பலரும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.

RIPDilli Babu: ‘ராட்சசன்’ பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம்.. அதிர்ச்சியில் கோடம்பாக்கம்.. காரணம் என்ன தெரியுமா?
ராட்சசன், மரகதநாணயம், ஓ மை கடவுளே உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 50. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த அவர், சிகிச்சை பலன்றி இறந்து போனதாக தகவல்கள் கூறுகின்றன.
அவரது நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, அவர் தோராயமாக அதிகாலை 12.30 மணியளில் உயிரிழந்ததாகவும், அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்றும் கூறினர். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காலை 10.30 மணி அளவில் பெருங்குளத்தூரில் இருக்கும் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்படும் அவரது உடல் மாலை 4.30 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.