Billa Re Release: ‘இரண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல.. போட்டின்னா போட்டிதான்’ - ரீ ரிலிஸ் ஆகும் பில்லா!
பில்லா திரைப்படத்தில், அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

பில்லா ரீ ரிலிஸ்!
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘பில்லா’ திரைப்படம் மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாக இருக்கிறது.
ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பில்லா படத்தை, நடிகர் அஜித்குமார் கடந்த 2007ம் ஆண்டு ரீமேக் செய்தார். அந்தப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும், ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக பில்லா திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில், அஜித்குமாரின் பிறந்தநாளான வருகிற மே 1ம் தேதியை முன்னிட்டு இந்தப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.