தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidamuyarchi: ‘கைவிடுவதா? வாய்ப்பே இல்லை.. அது எங்க பெருமையான புராஜெக்ட்’ - விடாமுயற்சி அப்டேட்!

Vidamuyarchi: ‘கைவிடுவதா? வாய்ப்பே இல்லை.. அது எங்க பெருமையான புராஜெக்ட்’ - விடாமுயற்சி அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 25, 2023 09:56 PM IST

விடாமுயற்சி திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து அதன் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் பேசியிருக்கிறார்.

விடாமுயற்சி அப்டேட்!
விடாமுயற்சி அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள் விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பின்னர் அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் வெளியாக வில்லை. இதனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அந்தப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் படம் குறித்த எந்த வித தகவலும் வெளியாக காரணத்தால் அந்தப்படம் கைவிடப்படுவதாக திரைவட்டாரத்தில் தகவல் பரவியது. இந்த நிலையில் இது குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் பேசியிருக்கிறார். 

இது குறித்து சந்திரமுகி 2 திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய லைகா சுபாஷ்கரன், “ அஜித்குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது எங்களின் மதிப்புமிக்க திட்டம்” என்று பேசினார்.

முன்னதாக பைக் டூரில் பிஸியாக இருந்த நடிகர் அஜித் கடந்த ஜூலை 26ம் தேதி சென்னை திரும்பினார். ஆகையால் விரைவில் இந்தப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை திரிஷா, நடிகை தமன்னா, நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகர் அர்ஜூன் ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது!

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்