Good Bad Ugly: தீயாக வேலை செய்யும் அஜித்.. குட் பேட் அக்லி அடுத்தக்கட்ட ஷூட் எங்கு? எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Good Bad Ugly: தீயாக வேலை செய்யும் அஜித்.. குட் பேட் அக்லி அடுத்தக்கட்ட ஷூட் எங்கு? எப்போது?

Good Bad Ugly: தீயாக வேலை செய்யும் அஜித்.. குட் பேட் அக்லி அடுத்தக்கட்ட ஷூட் எங்கு? எப்போது?

Aarthi Balaji HT Tamil
Published Aug 04, 2024 12:42 PM IST

Good Bad Ugly: குட் பேட் அக்லி, திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது.

தீயாக வேலை செய்யும் அஜித்.. குட் பேட் அக்லி அடுத்தக்கட்ட ஷூட் எங்கு? எப்போது?
தீயாக வேலை செய்யும் அஜித்.. குட் பேட் அக்லி அடுத்தக்கட்ட ஷூட் எங்கு? எப்போது?

இந்த படம் வரக்கூடிய, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ குட் பேட் அக்லி ’ படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

குட் பேட் அக்லி

முன்னதாக, படத்தில் அவரது லுக்கை பாதுகாக்க வேண்டும் என்பதால், படப்பிடிப்பில் அஜித் குமாருடன் செல்ஃபி எடுக்க படக்குழு தடை விதித்திருந்தது. இதை கேள்விபட்ட அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்யுமாறு கூறினார்.

அதன் படி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அஜித்தின் வெவ்வேறு பாணியிலான மூன்று படங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் நடிகர் அஜித் குமார் கலர் ஃபுல்லான சட்டை அணிந்து, ஸ்டைலான கூலர் போட்டு, கையில் டாட்டூக்களுடன் மாஸாக இருந்தார்.

குட் பேட் அக்லி போஸ்டர்

அதன் பின்னர் படத்தில் இருந்து இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்து ருக்கும் அஜித் குமாரின் திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, குட் பேட் அக்லி படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று நேற்று ( ஆகஸ்ட் 3 ) வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த போஸ்டரில், 32 வருட மனஉறுதி, துணிவு, ஒழுக்கம் மற்று கண்ணியம் ‘குட் பேட் அக்லி’ உடன் பயணம் செய்கிறது. இன்னும் பல ஆண்டுகள் உங்கள் புகழ் ஓங்க வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

குட் பேட் அக்லி ஷூட்

இந்நிலையில் குட் பேட் அக்லி, திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. வழக்கம் போல் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பான அறிவிப்பு வெளியாக வெறித்தனமாக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விடாமுயற்சி

விடாமுயற்சி திரைப்படத்தில் இருந்தும் அவரின் 32 ஆண்டு கால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. துணிவு படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள், விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். அனிருத் இசையமைத்து இந்தப்படத்தில் அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.