Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளை.. பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல்!-in sun tv kayal serial episode today promo on august 12th and 2024 and kayal behave calm - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளை.. பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல்!

Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளை.. பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல்!

Marimuthu M HT Tamil
Aug 12, 2024 11:56 AM IST

Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளையால், பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல் குறித்த புரோமோ வெளியாகியுள்ளது.

Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளை.. பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல்!
Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளை.. பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல்!

இன்றைய எபிசோட் புரோமோ:

கயலுக்கு எழிலுக்கும் திருமணம் நடக்கப்போகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க, கயலின் தாயின் முகத்தில் சோகம் இருக்கிறது. அப்போது அதற்கான காரணம் குறித்து கேட்கும் கயலிடம் அவரது தாய், ‘’உன்னுடைய கல்யாணத்தில் ராஜலட்சுமி, மாமா எல்லோரும் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்’’ என்கிறார். மேலும் ‘நீ அவர்களிடம் எப்படி பேசுவீயோ எனக்கு தெரியாது. உன் கல்யாணத்துக்கு எல்லோரும் வரவேண்டும்’’ எனக் கேட்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் கயல்,''பெரியப்பா, பெரியம்மா, அத்தை, வேதவள்ளி எல்லோரையும் வரவைக்கிறோம்’’என்று கூறுகிறார். அப்போது தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற, பெரியப்பா வீட்டுக்குச் செல்லும் கயல் அவர்களிடம் பத்திரிகை வைத்து திருமணத்துக்கு வரும்படி கனிவாக அழைக்கிறார். அடுத்து அவரது அத்தையையும் நேரில் பார்த்து பணிவன்புடன் தனது திருமணத்திற்கு வரும்படி அழைக்கிறார், கயல். பின் அனைவரது ஆசைப்படியும் திருமணம் நல்லமுறையில் திருமணம் நடக்கவேண்டும் என நினைக்கிறார். அப்படியே அந்த புரோமோ முடிகிறது.

முந்தைய எபிசோட்:

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி கயல் சீரியலில், முன்னணி கதாபாத்திரமான கயல் தனது பெரியப்பாவின் வீட்டிற்கு ராத்திரி நேரம் பார்த்துசென்று கதவைத் தட்டுகிறார். கதவைத்திறக்கும் கயலின் பெரியப்பா, ’யாருக்கும் உடல்நிலை சரியில்லையா, இந்நேரத்தில் வந்திருக்கீங்க’ எனக் கேட்கிறார். அப்போது கயலின் சகோதரனும் உடன் வந்திருக்கிறார்.

அப்போது பெரியப்பாவின் பதிலுரைக்கும் கயல், ‘’ உங்கள் ஆட்டம் இன்றுடன் முடியப்போகிறது’’ என்கிறார். அதைக் கேட்டு பேசும் கயலின் பெரியப்பா, ‘’ என்ன கயல் ஆட்டம் முடியப்போகுதுன்னு லூஸு மாதிரி பேசிட்டு இருக்க.. என்னாச்சு உனக்கு’’ என்கிறார்.

அதற்கு பதில் கூறும் கயல், ‘’ தான் நல்லாத்தான் இருக்கேன். ஆனால், நீங்கள் தான் எங்க தம்பி, தங்கச்சியோட எதிர்காலத்தை அழிக்கனும்னும் வெறிகொண்டு சுத்திட்டு இருக்கீங்க.. ஆனால், எங்க குடும்பத்தோட வீக்னஸ் தெரிஞ்சு, அதில் கை வைச்சிருக்கீங்க பாருங்க, நீங்க ஃபெர்பெக்ட் வில்லன் தான்.

நீங்கள் பயமுறுத்தியதும் என் தம்பி காக்கிச்சட்டையைத் தூக்கிப்போட்டுட்டு பொட்டலம் மடிக்கப்போயிடணும். ஆனந்தி டாக்டராகக் கூடாது. என் அம்மாவும் அண்ணியும் உங்க வீட்டில் வேலைக்காரியாக இருக்கணும். என் அண்ணன் மூர்த்தி குடிகாரனாக இருக்கணும் அதானே.. அது இந்த கயல் இருக்கிற வரை நடக்காது.’’ என பல உண்மைகளை கேள்வியாகக் கேட்கிறார். இதைக்கேட்டு திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல், திருதிருவென முழிக்கின்றனர், கயலின் பெரியப்பாவும் அவரது குடும்பத்தினரும்!

மேலும் கயல், “ எங்க அண்ணன் உங்க காலில் விழுந்து எதுவும் பண்ண வேண்டாம் என கெஞ்சி இருக்கான். ஆனால் நீ எல்லாம் பெரிய மனுஷன் மாதிரியா நடந்து இருக்க? கல்யாணத்தை கெடுத்துவிடலாம் என உங்கள் நினைப்பு ஒரு போதும் நடக்காது. கல்யாணத்திற்கு வரவே வேண்டாம்.

நான் ஏன் அப்படி சொல்றேன் என்றால் நீங்க யாரும் கல்யாணத்திற்கு வரவே வேண்டாம்’’ என மிகவும் கெத்தாக, தன் பெரியப்பாவிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

வீட்டிற்கு வந்து தனது அம்மாவிடம், “மூத்த பிள்ளையை வைத்து குடும்பத்தை அழிக்கத் திட்டம் போட்டு இருக்கிறார்,பெரியப்பா. இதைக் கேட்கும்போது உனக்கு ரத்தம் கொதிக்கவே இல்லையா?’’ எனக் கேள்வி கேட்கிறார், கயல்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.