Kayal Serial: மனோஜ் மண்டை உடைப்பு.. கை ஓங்கிய ராஜலட்சுமி.. ஆப்பு வைத்த கயல்.. இன்றைய நாளின் ப்ரோமோ-sun tv kayal serial episode on august 8 2024 indicates - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: மனோஜ் மண்டை உடைப்பு.. கை ஓங்கிய ராஜலட்சுமி.. ஆப்பு வைத்த கயல்.. இன்றைய நாளின் ப்ரோமோ

Kayal Serial: மனோஜ் மண்டை உடைப்பு.. கை ஓங்கிய ராஜலட்சுமி.. ஆப்பு வைத்த கயல்.. இன்றைய நாளின் ப்ரோமோ

Aarthi Balaji HT Tamil
Aug 08, 2024 10:00 AM IST

Kayal Serial: தன் மகனை அடித்த காரணத்தினால் வீடு ஏறி சண்டை போட வந்த ராஜி அத்தையை பார்த்து கயல், “ உங்க கிட்ட இருக்கும் அதிகமான விஷயம் என்ன தெரியமா? பணம் மட்டும் தான். அது அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை “ என்றார்.

மனோஜ் மண்டை உடைப்பு.. கை ஓங்கிய ராஜலட்சுமி.. ஆப்பு வைத்த கயல்.. இன்றைய நாளின் ப்ரோமோ
மனோஜ் மண்டை உடைப்பு.. கை ஓங்கிய ராஜலட்சுமி.. ஆப்பு வைத்த கயல்.. இன்றைய நாளின் ப்ரோமோ

சும்மா இருக்க மாட்டார்

மூர்த்தி, “ அத்தை எதுவும் யோசிக்க மாட்டங்க அம்மா அதனால் கவலைப்பட வேண்டாம் “ என சொன்னார், கயலின் தாய், “ தலை போகும் விஷயம் என்றால் கூட ராஜீ பொறுத்து ஏற்றுக் கொள்வார். ஆனால் அவளின் மகன் மீது கை வைத்தால் ஒரு போதும் சும்மா இருக்க மாட்டார்” என்றார்.

தன் மகனை அடித்த காரணத்தினால் வீடு ஏறி சண்டை போட வந்த ராஜி அத்தையை பார்த்து கயல், “ உங்க கிட்ட இருக்கும் அதிகமான விஷயம் என்ன தெரியமா? பணம் மட்டும் தான். அது அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை “ என்றார்.

ராஜ லட்சுமிக்கு ஆப்பு வைத்த கயல்

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அத்தனை பேர் முன்பாக என் பையனை அடித்து இருப்பாய் என்று ராஜ லட்சுமி கையை ஓங்கி கயலை அடிக்க வந்தார். ஆனால் கயல் அடிக்கும் அவர் கையை பிடித்துவிட்டார். இதனால் ராஜ லட்சுமி ஷாக்கானார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்

நேற்றைய ( ஆகஸ்ட் 7 ) எபிசோட்டில் எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் கெளதமிடம், கயல், ” கோபமாக சென்று, இன்னும் ஒரே மாதத்தில் நீ தப்பானவன் என்பதை, இந்த உலகத்திற்கு படம் போட்டு காட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள்”. அதற்கு கெளதம் அதையும் பார்ப்போம் என்று கூறுகிறான்.

அவமானப்பட்டு வந்த மூர்த்தி

மூர்த்தி ராஜலட்சுமி வீட்டிற்கு சென்று அவமானப்பட்டது தெரிந்து விட்டது. இந்த நிலையில் கோபமாக மூர்த்தியை நோக்கி வந்த கயல், உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்…பத்திரிக்கை கொடுக்கிறேன் என்று சொல்லி, ராஜலட்சுமி வீட்டிற்கு சென்று அவமானப்பட்டு வந்திருக்கிறாய். இதனை தெரிந்து கொண்ட கயல் கடுமையாக கோபம் அடைந்தார்.

மனோஜ் மண்டை உடைப்பு

இதனால் அதே கோபத்துடன் ஜிம்மில் ஒர்க் - அவுட் செய்து கொண்டு இருந்த மனோஜை சென்று பார்த்தார். தான் செய்தது தவறு என்று அவர் ஒப்புக்கொள்ளாமல் கயலிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். அது மட்டுமில்லாமல், இனிமேல் சொந்தம் என்று வந்தால், அம்மாவையும் அடிப்பேன் என்று மிகவும் நக்கலாக பேசினார் மனோஜ். கடும் கோபம் கொண்ட கயல் அருகில் இருந்த பாட்டில் எடுத்து மனோஜ் மண்டையில் அடித்துவிட்டு அங்கு இருந்து கிளம்புவதுடன், எபிசோட் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.