Kayal Serial: தெரியவந்த உண்மை.. கயல் எடுத்த அதிரடி முடிவு.. பீதியில் நடுங்கும் பெரியப்பா-kayal serial today episode promo on august 9 2024 indicates kayal action - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: தெரியவந்த உண்மை.. கயல் எடுத்த அதிரடி முடிவு.. பீதியில் நடுங்கும் பெரியப்பா

Kayal Serial: தெரியவந்த உண்மை.. கயல் எடுத்த அதிரடி முடிவு.. பீதியில் நடுங்கும் பெரியப்பா

Aarthi Balaji HT Tamil
Aug 09, 2024 07:56 AM IST

Kayal Serial: மூர்த்தி தனது மனைவியிடம், “ குடும்பத்திடம் நான் பெரிய நம்பிக்கை துரோகம் செய்து கொண்டு இருக்கிறேன். கயல் திருமணத்திற்காக பெரியப்பாவிடம் மொத்த குடும்பத்தையும் அடிமையாக இருக்க வைக்கிறேன் என்று எழுதி கொடுத்து வந்து இருக்கிறேன் ” என அழுது கொண்டே சொல்லுகிறார்.

தெரியவந்த உண்மை.. கயல் எடுத்த அதிரடி முடிவு.. பீதியில் நடுங்கும் பெரியப்பா
தெரியவந்த உண்மை.. கயல் எடுத்த அதிரடி முடிவு.. பீதியில் நடுங்கும் பெரியப்பா

அதில், மூர்த்தி தனது மனைவியிடம், “ குடும்பத்திடம் நான் பெரிய நம்பிக்கை துரோகம் செய்து கொண்டு இருக்கிறேன். கயல் திருமணத்திற்காக பெரியப்பாவிடம் மொத்த குடும்பத்தையும் அடிமையாக இருக்க வைக்கிறேன் என்று எழுதி கொடுத்து வந்து இருக்கிறேன் ” என அழுது கொண்டே சொல்லுகிறார்.

இதை அவ்வழியாக எதார்த்தமாக வந்த கயல் கேட்டுவிட்டார். கேட்டுவிட்டு சும்மாவாக இருப்பார். உடனே தன் அண்ணை அழைத்து கொண்டு நடு இரவில் பெரியப்பா வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

கயல் இருக்கும் வரை நடக்காது

” என் தம்பி, தங்கச்சி எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்று வெறி கொண்டு சுற்றி வரும் உங்கள் ஆசை, கயல் இருக்கும் வரை நடக்காது “ என மிகவும் துணிச்சலாக பேசினார். மேலும் பெரியப்பாவிடம், கைநாட்டு வாங்கி கொண்டு பேப்பரில் தீவிரமாக எதையோ எழுதி கொண்டு இருக்கிறார். 

பீதியில் பெரியப்பா

கயல் என்ன செய்ய போகிறார் என்று பீதியில் பெரியப்பா மற்றும் அவரின் மனைவி அதிர்ச்சி அடைந்து போகிறார்கள். திருப்பத்துடன் வரும் இன்றைய எபிசோட்டை சன் தொலைக்காட்சியில் இரவு 7 . 30 மணிக்கு பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

கயல், மனோஜ் மண்டையை அடித்து உடைத்த காரணத்தினால் அவரின் தாய் மிகவும் பயத்தில் இருக்கிறார்.

மூர்த்தி, “ அத்தை எதுவும் யோசிக்க மாட்டங்க அம்மா அதனால் கவலைப்பட வேண்டாம் “ என சொன்னார், கயலின் தாய், “ தலை போகும் விஷயம் என்றால் கூட ராஜீ பொறுத்து ஏற்றுக் கொள்வார். ஆனால் அவளின் மகன் மீது கை வைத்தால் ஒரு போதும் சும்மா இருக்க மாட்டார்” என்றார்.

தன் மகனை அடித்த காரணத்தினால் வீடு ஏறி சண்டை போட வந்த ராஜி அத்தையை பார்த்து கயல், “ உங்க கிட்ட இருக்கும் அதிகமான விஷயம் என்ன தெரியமா? பணம் மட்டும் தான். அது அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை “ என்றார்.

ராஜ லட்சுமிக்கு ஆப்பு வைத்த கயல்

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அத்தனை பேர் முன்பாக என் பையனை அடித்து இருப்பாய் என்று ராஜ லட்சுமி கையை ஓங்கி கயலை அடிக்க வந்தார். ஆனால் கயல் அடிக்கும் அவர் கையை பிடித்துவிட்டார். இதனால் ராஜ லட்சுமி ஷாக்கானார். மேலும் இனிமேல் நீ தான் என்னுடைய எதிரி என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.