நான் மிகவும் நேர்மையானவர்.. விவாகரத்து வதந்திகளுக்களுக்கு விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நான் மிகவும் நேர்மையானவர்.. விவாகரத்து வதந்திகளுக்களுக்கு விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்..

நான் மிகவும் நேர்மையானவர்.. விவாகரத்து வதந்திகளுக்களுக்கு விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்..

Malavica Natarajan HT Tamil
Nov 24, 2024 03:01 PM IST

நான் மிகவும் நேர்மையானவர். அடுத்தவர்களின் செயல்கள் என்னை எப்போதும் பாதிக்காது என நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

நான் மிகவும் நேர்மையானவர்.. வதந்திகளுக்களுக்கு விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்..
நான் மிகவும் நேர்மையானவர்.. வதந்திகளுக்களுக்கு விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்..

ஐஸ்வர்யா ராயுடன் திருமணம்

இதற்கிடையில், தன்னை விட வயதில் மூத்தவரான நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ள நிலையில், சமீப காலமாக அபிஷேக் பச்சன் மீது பல எதிர்மறாயான கருத்துகளும், வதந்திகளும் பரவி வருகின்றன.

பெண் நடிகையுடன் தொடர்பு, மனைவி ஐஸ்வர்யா ராயுடன் கருத்து வேறுபாடு, மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவது என எண்ணற்ற வதந்திகள் பரவி வந்தன.

நம்பிக்கை எனும் ஒளியை பிடித்துக் கொள்ளுங்கள்

இந்நிலையில், அபிஷேக் பச்சன், ஈடைம்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், " என்னை சுற்றி பல வதந்திகளும், எதிர்மறை கருத்துகளும் சூழ்ந்துள்ளன. இவற்றில் கவனம் செலுத்தினால், அது என்னையே மூழ்கடித்துவிடும் எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஒருவர் தன் கடினமான சூழலில் நம்பிக்கை எனும் ஒளியை விடாமல் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது, நம்மை ஆட்டிப் படைத்து விழுங்கிவிடும்.

குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்க மாட்டேன்

விடாமுயற்சியில் என ஒரு சொல் உள்ளது. அதை அப்படியே வைத்துக் கொண்டு, நம் அடிப்படையை மாற்றாமல் இருக்க வேண்டும். நாம் விமர்சனங்களுக்கு பயந்து ஏதாவது செய்ய முற்பட்டால், நம் செயல்களாலேயே நாம் கைவிடப்படுவோம். கெட்டது தன்னைத் தானே விடாமல் பிடித்துக் கொள்ளும் பொழுது, நல்ல விஷயங்களை மட்டும் நாம் ஏன் கைவிட வேண்டும்.

நான் மிகவும் நேர்மையானவன். அதை யாராலும் மாற்ற முடியாது. நான் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை. நம்முள் எங்காவது நம்பிக்கையின் ஒளி இருக்கும். அதனை விடாமல் பிடித்திருந்தால், தடை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதிலிருந்து மீளலாம்.

நான் காற்றில் அசையும் இலையாக இருக்கப் போவதில்லை. அதனால், நான் எவ்வளவு திடமான நபர் என என்னை விமர்சிப்பவர்களுக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார்.

17 ஆண்டுக்குப் பின் விவாகரத்தா?

முன்னதாக, பாலிவுட் சினிமாவில் திருமணத்திற்கு பின்னும் கோலோச்சி வரும் நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது கணவர் சுமார் 17 ஆண்டு குடும்ப வாழ்க்கைக்குப் பின் பிரிய இருக்கிறார் என்ற தகவல் சில ஆண்டுகளாகவே பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் தனது திருமண மோதிரத்தை அணியவில்லை, அவரது மாமியாரான ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயை அடக்கி வைத்துள்ளார், ஐஸ்வர்யா ராய்க்கு மருத்துவர் ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் உள்ளார் என ஏராளமான வதந்திகள் பரவி வருகிறது.

நடிகையுடன் தொடர்பு

மேலும், அபிஷேக் பச்சனின் தஸ்வி என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை நிம்ரத் கவுர் என்பவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். இதனால், அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவை கூட்டிக் கொண்டு அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதன் காரணத்தால் இருவருக்கும் இடையே வெறுப்பு அதிகரித்து இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் எனக் கூறியது மட்டுமின்றி அதற்கான சில ஆதரங்களையும் வெளிப்படுதத்தினர்.

இந்த இக்கட்டான சூழலிலும், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என அபிஷேக் பச்சனே விளக்கமளித்துள்ளார். ஆனால், இவற்றை ஏற்க மறுக்கும் மக்கள், மகள் ஆராத்யாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.