ஐஸ்வர்யா ராயின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்காது.. அபிஷேக் பச்சனின் கிசுகிசு நடிகை பளீர்..
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்காது என அபிஷேக் பச்சனுடன் கிசுகிசுக்கப்படும் நடிகை நிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் மாபெரும் நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமண வாழ்க்கை சுமார் 15 வருடங்களுக்கு மேல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.
நடிகையுடன் அபிஷேக் பச்சனுக்கு தொடர்பு?
சில தரப்பு ஐஸ்வர்யா ராயையும், சில தரப்பு அபிஷேக் பச்சனையும் குறை சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் தான். சில மாதங்களாக அபிஷேக் பச்சனுக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு தஸ்வி எனும் திரைப்படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நிம்ரத் கவுர் நடித்திருப்பார். அந்த சமயத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் தான் தற்போது ஐஸ்வர்யா ராயுடன் பிரிந்து வாழும் நிலைக்கு அபிஷேக் பச்சனை தள்ளி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண வாழ்க்கை நீடிக்காது!
முன்னதாக நிம்ரத் கவுரும் அபிஷேக் பச்சனும் தஸ்வி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ இப்போது வைரலாகிறது. அந்த புரொமோஷன் நிகழ்ச்சியில், அபிஷேக் பச்சன் சமீபத்தில் தனது 15வது திருமண நாள் கொண்டாட்டம் குறித்து பேசிக் கொண்டிருப்பார். அப்போது குறுக்கிட்ட, நிம்ரத் கவுர் அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்காது என பொது வெளியிலேயே கூறி இருப்பார். இதைக் கேட்டு ஆத்திரப்படாத அபிஷேக் பச்சன், நிம்ரத் கவுரிடம் நன்றி என பதில் பேசி இருப்பார்.
ரசிகர்கள் குமுறல்
இந்க வீடியோவை இப்போது நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து, எப்படி அபிஷேக் பச்சனால் ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிந்தது. ஐஸ்வர்யா ராய் மீது எத்தனைப் பேர் பிரியம் வைத்துள்ளனர். ஆனால், அவர் உங்களைத் தான் விரும்பி திருமணம் செய்து கொண்டார். அப்படி இருக்கையில், எப்படி இன்னொரு பெண்ணிடம் நீங்கள் பழக முடியும் என மிகவும் காட்டமாக அபிஷேக் பச்சனை விமர்சித்து வருகின்றனர்.
விவாகர்த்து பற்றி யோசிக்க மாட்டோம்
இன்னொரு தரப்பினர், ஐஸ்வர்யா ராய் விவாகரத்து பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில், ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் திருமண புகைப்படத்தை காட்டிய தொகுப்பாளர், இந்தியாவில் திருமணம் என்பது ஒருநாள் நிகழ்ச்சி இல்லை என பேசியிருப்பார்.
அதைக் கவனித்த அபிஷேக் பச்சன், ஆமாம், இந்தியாவில் சுமார் 10 நாட்கள் வரை திருமணம் நடக்கும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்குகள் நடக்கும் எனத் தெரிவித்திருப்பார். இவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, இப்பிடி பிரம்மாண்டமாக திருமணம் செய்துவிட்டு விவாகரத்து பெறுவது என கூறிவரும்போது ஐஸ்வர்யா ராய் குறுக்கிட்டு பதில் பேசி இருப்பார். அதில், நாங்கள் இருவரும் விவாகரத்து பற்றி யோசிக்கக் கூட மாட்டோம் என தங்கள் உறவின் மீது கொண்ட ஆணித்தரமான நம்பிக்கையின் பேரில் தீர்க்கமாக பேசினார்.
ஆனால், சமீப காலங்களில் நடந்த சம்பவங்களால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.