மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன்! இயக்குனர் மணிரத்னத்தின் முயற்சி!
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவர் ஆவர். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு உம்ராவ் ஜான் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட்டின் சிறந்த ஜோடிகளின் பட்டியலில் இணைந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்வதாக செய்திகள் உலா வந்தம் வண்ணம் உள்ளன. மேலும் அபிஷேக் பச்சனின் குடும்பத்தார் மட்டும் தனியாக விழாக்களில் கலந்து கொள்வதும், ஐஸ்வர்யாவை தள்ளி வைத்திருப்பது போன்றவாறே தெரிந்து வந்தது.
குறிப்பாக உலக சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட அம்பானி வீட்டு திருமானத்தில் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. மேலும் கூடுதலாக அபிஷேக் பச்சனுடன் இணனைந்து நடித்த நிம்ரத் கவுருடன் தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்தி செய்திகளுக்கு ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் என இருவரும் எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம்
இந்தியா சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தக் லைப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா,சிம்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து அவரது அடுத்த படம் குறித்தான தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.