Beast படம் பிடிக்கவே இல்ல.. அவங்க எல்லாம் லூசு ஆகிட்டாங்களா.. எனக்கு புரியவே இல்ல.. அதிதி பாலன் ஆத்திரம்!
ஆனா பீஸ்ட் பிடிக்கவே இல்ல ஓகே வா.. பீஸ்ட் ஃபர்ஸ்ட் 15 நிமிஷம் மட்டும் தான். நானும் தமிழ்ல இருந்த 4 பேரும் செம்மயா கத்தி என்ஜாய் பண்ணி பார்த்தோம். ஆனா அந்த 15 ஆவது நிமிஷத்துக்கு அப்பறம் மற்றவங்க எல்லாம் சைடுல இருந்து பாக்குறாங்க நாங்க 4 பேரும் குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கோம்.

நடிகை அதிதிபாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அருவியாக நடித்த அதிதி பாலன் வெளிப்படுத்திய நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்த நிலையில் அண்மையில் அதிதி பாலன் டேக் 1 யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பீஸ்ட் படம் எனக்கு பிடிக்கவே இல்லை என்பது உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்,
பீஸ்ட் பிடிக்கவே இல்ல
நான் ஆக்சுவலி சொல்லணும்னா தளபதி ஃபேன்.. இது நா சொல்லியே ஆகணும் பீஸ்ட் படத்துக்கு நாங்க 20 பேர் போனோம். நாங்க நாலு பேர் தமிழ் மற்ற எல்லாரும் மலையாளி, ஹிந்தி அது இதுன்னு..
ஆனா பீஸ்ட் பிடிக்கவே இல்ல ஓகே வா.. பீஸ்ட் ஃபர்ஸ்ட் 15 நிமிஷம் மட்டும் தான். நானும் தமிழ்ல இருந்த 4 பேரும் செம்மயா கத்தி என்ஜாய் பண்ணி பார்த்தோம். ஆனா அந்த 15 ஆவது நிமிஷத்துக்கு அப்பறம் மற்றவங்க எல்லாம் சைடுல இருந்து பாக்குறாங்க நாங்க 4 பேரும் குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கோம். மத்தவங்க எல்லாரும் அடி வாங்குவீங்க.. ஃபர்ஸ்ட் 15 மினிட்ஸ் கத்திட்டு இருந்துட்டு இப்ப என்ன அமைதியா இருக்கீங்கன்னாங்க.. நாங்க 4 பேரும் தூங்குறத ஒரு வீடியோ கூட எடுத்தாங்க..