எய்ட்ஸ் நோயாளி கேரக்டர்.. “ 8 கிலோ குறைச்சேன்.. முடிய வெட்டும் போது உடைஞ்சிட்டேன்;ரஜினிகாந்த் கூப்பிட்டு..” - அதிதி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எய்ட்ஸ் நோயாளி கேரக்டர்.. “ 8 கிலோ குறைச்சேன்.. முடிய வெட்டும் போது உடைஞ்சிட்டேன்;ரஜினிகாந்த் கூப்பிட்டு..” - அதிதி

எய்ட்ஸ் நோயாளி கேரக்டர்.. “ 8 கிலோ குறைச்சேன்.. முடிய வெட்டும் போது உடைஞ்சிட்டேன்;ரஜினிகாந்த் கூப்பிட்டு..” - அதிதி

Kalyani Pandiyan S HT Tamil
Oct 15, 2024 02:49 PM IST

பிரபல நடிகையான அதிதி பாலன் ‘அருவி’ படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடிக்க உடல் இளைத்த கதையையும், அதற்கு ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷனையும் பற்றி பேசி இருக்கிறார்.

எய்ட்ஸ் நோயாளி கேரக்டர்.. “ 8 கிலோ குறைச்சேன்.. முடிய வெட்டும் போது உடைஞ்சிட்டேன்;ரஜினிகாந்த் கூப்பிட்டு..”  - அதிதி
எய்ட்ஸ் நோயாளி கேரக்டர்.. “ 8 கிலோ குறைச்சேன்.. முடிய வெட்டும் போது உடைஞ்சிட்டேன்;ரஜினிகாந்த் கூப்பிட்டு..” - அதிதி

இந்தப்படத்திற்காக அதிதி கிட்டத்தட்ட 8 கிலோ வரை உடல் எடை குறைத்து இருந்தார். படம் ரிலீஸ் ஆகி பாராட்டைப் பெற்ற பின்னர்,  நடிகர் ரஜினி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். குறிப்பாக, அதிதியின் நடிப்பை அவர் வியந்து பாராட்டினார். இந்த நிலையில் அண்மையில் அதிதி பாலன் டேக் 1 யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருந்தார். அந்தப்பேட்டியில் அவர் அருவி படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

ஜாலியாக இருந்தேன்

இது குறித்து அவர் பேசும் போது, “ ‘அருவி’ படத்திற்கு எனக்கு கிடைத்த ரெஸ்பான்சை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும். எனக்கு அப்படி ஒரு வரவேற்பு அந்த படத்தில் கிடைத்தது. அதற்கு முன்னதாக, எனக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ அந்த வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு, சந்தோஷமாக ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அருவி அதிதி பாலன்
அருவி அதிதி பாலன்

ஆனால், அருவி என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றி விட்டது. குறிப்பாக அந்தப் படத்தில் எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, முடியை வெட்டி இருப்பது போன்ற காட்சி இருக்கும். அந்தக் காட்சியை நாங்கள் ஒரு குடிசை வீட்டில் தான் எடுத்தோம் அந்தக்காட்சியை எடுக்கும் போது, அந்தப்படத்தின் கேமராமேன் அங்கு கேமராவை வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அந்த குடிசைக்குள் நானும் இயக்குநர் அருணும் மட்டும்தான் இருந்தோம். அந்தக்காட்சியை நாங்கள் ஒரே டேக்கில் எடுத்து முடித்தோம். அந்தக்காட்சிக்காக நான் உடல் இளைத்தேன், முடியை வெட்டிக்கொண்டேன். 

ஒரு பெண்ணிற்கு முடிதான் அழகின் பிரதானம். அதையே வெட்ட சொல்கிறார்களே என்று எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது படப்பிடிப்பில் அவர்கள் முடியை வெட்டும் பொழுது என் நெஞ்சமே உடைந்து நொறுங்கி விட்டது. அந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தது. அதற்காக நான் அதை கஷ்டப்பட்டு செய்தேன் என்றெல்லாம் சொல்ல வில்லை. அந்த செயல்முறையை நான் சந்தோஷமாகத்தான் செய்தேன். ஆனாலும் ஒரு கட்டத்தில் எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

 

அதிதி பாலன்
அதிதி பாலன்

கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு கிலோ வரை அந்த படத்திற்காக எடையை நான் குறைந்தேன். ஆனால் அதற்கு பலன் கிடைத்தது. அந்தப் படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தாலும், குறிப்பாக ரஜினி சார் என்னை அழைத்து பாராட்டியதை மறக்க முடியாதது. அந்த சந்திப்பின் போது ரஜினி சார் என்னை ஃபிலிம் இன்ஸிடியூட்டில் படித்து விட்டு நடிக்க வந்தீர்களா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அப்படியா?.. அங்கு செல்லாமலேயே நீங்கள் இப்படி நடித்தால் நாங்களெல்லாம் எங்கே செல்வது என்றார்.

இயக்குனரிடம் இந்த பெண்ணை எதற்காக இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தீர்கள்? எப்படி தேர்வு செய்தீர்கள்? அந்த சீனை எப்படி எடுத்தீர்கள்? இந்த சீனை எப்படி எடுத்தீர்கள் என்று அவ்வளவு ஆர்வமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த வயதிலும் தொழிலை கற்றுக்கொள்ள இருக்கும் ஆர்வத்தை பார்த்து நான் வியந்தேன்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.