Mohanlal: ஓரமாக ஒதுக்கி வைத்த சினிமா.. முட்டி மோதிய மோகன்லால்..கொத்தி தூக்கிய பாசில்.. - லால் என்ட்ரி கதை!
Mohanlal: “இயக்குநர் சிபி உட்பட அங்கிருந்த 3 நடுவர்கள், அந்த இளைஞனுக்கு 100க்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். மீதமிருந்த இரண்டு பேரான பாசிலும், மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர் ஜிஜோவும் 90 மதிப்பெண்கள் அளிக்கிறார்கள். அந்த நடிகர் மோகன்லால்” - லால் என்ட்ரி கதை

Mohanlal: அழகான மனைவிக்கு அடித்து துன்புறுத்தும் கணவன் வாய்த்து, தினமும் அவளை சித்ரவதை செய்கிறான். இதற்கிடையே அவள் கல்யாணம் ஆனவள் என்பது தெரியாமல், அவளின் அழகில் மயங்கி, ஒருவன் காதலிக்கிறான். இப்படி ஒரு கதையை திரையில் சொல்லி, மலையாள சினிமாவின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் இயக்குநர் பாசில்.
கூச்ச சுபாவம் கொண்டவனாக இருக்க வேண்டும்
இந்தப்படத்தில் காதலனாக ''ஒரு தலை ராகம்' ஷங்கர் தேர்வு செய்யப்படுகிறார். மனைவி கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜ் கமிட் செய்யப்படுகிறார். கணவனாக யாரை நடிக்க வைப்பது என்று டிஸ்கஷன் தொடங்கும் போதே, அந்த கதாபாத்திரம் சற்றே கூச்ச சுபாவியாக, வெட்கம் நிரம்பியவனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் பாசில்.
இந்த நிலையில் ஆடிஷனுக்கு வந்த ஒரு இளைஞர் கூச்சமும், வெட்கமும், புன்னகையும், நிரம்பி இருப்பதை பார்க்கிறார் பாசில். அங்கு 5 பேர் கொண்ட நடுவர் குழு இருந்தது. அதில் இயக்குநர் சிபி உட்பட அங்கிருந்த 3 நடுவர்கள், அந்த இளைஞனுக்கு 100க்கு 10 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கிறார்கள். மீதமிருந்த இரண்டு பேரான பாசிலும், மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குனர் ஜிஜோவும் 90 மதிப்பெண்கள் அளிக்கிறார்கள். அந்த நடிகர்தான் இன்று மலையாளத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால்.