தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Here Why Trisha Rushed To Dehli From The Kashmir Schedule Of Lokesh Kanagaraj Vijay Leo

Trisha on LEO: லோகேஷூடன் கருத்து வேறுபாடு.. ‘லியோ’ -வில் இருந்து விலகிய த்ரிஷா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 08, 2023 01:54 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

விஜயுடன் த்ரிஷா
விஜயுடன் த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தற்போது காஷ்மீர் சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து வெளியான டைட்டில் வீடியோவும் சமூக வலைதளங்களில் மில்லியன் வியூஸ்களை எட்டி இருக்கிறது; இந்த நிலையில் அதிர்ச்சி தரும் தகவலாக இந்தப்படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியதாக தகவல் வெளியானது. அதில் 'லியோ' படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவுடன் காஷ்மீர் சென்ற நடிகை திரிஷா மூன்று நாட்களுக்கு பிறகு விமானம் மூலம் தனியாக திரும்பியதாக சொல்லப்பட்டது. 

மேலும் லோகேஷ் கனகராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் மற்றும் காஷ்மீர் குளிரை தாங்க முடியாததாலும் த்ரிஷா காஷ்மீரிலிருந்து வந்து விட்டதாகவும் தகவல் பரவின. அப்படியானால் நடிகை த்ரிஷா லியோ படத்தில் இல்லையா? என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேட்டு வந்தனர். அதற்கு தற்போது உண்மை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது.

உண்மை என்ன? 

டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் வெளியிட்ட தகவலின் படி, “ த்ரிஷா நிச்சயம் லியோ படத்தில் நடிக்கிறார். காஷ்மீரின் குளிர் -1 டிகிரிலிருந்து -3 டிகிரி வரை இருப்பதால் அந்த குளிர் த்ரிஷாவின் உடல்நிலைக்கு ஒத்து வரவில்லையாம். அதன் காரணமாக த்ரிஷா காஷ்மீரில் இருந்து டெல்லி வந்துள்ளார். அவ்வளவுதான். அவர் மீண்டும் லியோ படத்தில் இணைவார். இதனை த்ரிஷாவின் தாயாரான உமா கிருஷ்ணனும் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ தனது மகள் லியோ ஷூட்டிங்கில் தான் இருக்கிறார். அவள் சென்னை திரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்