HBD K. Balachander: நடிகர் கமலை வைத்து இத்தனை படங்களை இயக்கியிருக்காரா?-இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் பிறந்த நாள்
K. Balachander: சிறுவயதிலேயே நவராத்திரி விழாக்களின் போது வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களுடன் இணைந்து நாடகம் போட்டார். அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்.சி படித்த போது ஏராளமாக நாடகங்களை போட்டார்.
திரை உலகின் பீஷ்மர், ராஜ ரிஷி என்று எல்லோரும் அன்புடன் அழைக்கும் கே.பாலச்சந்தர் முதன் முதலில் இயக்கிய படம் நீர்க்குமிழி. கடைசியாக இயக்கிய படம் பொய். இப்படி இந்த உலகின் நிலையின்மையை உணர்த்தும் வகையில் அவர் வாழ்வு அமைந்திருந்தது. அந்த வகையில் அவர் இயக்கிய படங்கள் மட்டும் அல்ல அவரது வாழ்வே உலகின் நிதர்சனத்தை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த கே.பாலச்சந்தர் பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தற்போது திருவாரூரில் உள்ள நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில் கைலாசம் காமாட்சி அம்மாள் தம்பதிக்கு மகனாக 1930ம் ஆண்டு ஜூலை 9ந்தேதி பிறந்தார் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர். சிறுவயதிலிருந்தே தந்தையின் சிரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வும் இவரிடம் ஒட்டிக்கொண்டது. ஆனாலும் 8ஆவது வயது முதல் சினிமா, நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டார்.
நாடகத்தில் ஆர்வம்
சிறுவயதிலேயே நவராத்திரி விழாக்களின் போது வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களுடன் இணைந்து நாடகம் போட்டார். அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்.சி படித்த போது ஏராளமாக நாடகங்களை போட்டார்.
பின் நாட்களில் சென்னையில் பணியாற்றியபோது இவர் போட்ட மேஜர் சந்திரகாந்த் நாடகம் தொழில் முறை குழுவினரையே வியப்பில் ஆழ்த்தியது.
1964ம் ஆண்டு கே.பாலச்சந்தர் எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தில் வசன கர்த்தாவாக திரை உலகில் காலடி வைத்தார். அன்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான், அடுத்த பல பத்தாண்டுகள் அவர் தன் உள்ளங்கையில் தமிழ் திரை உலகை தாங்கி பிடிப்பார் என்று. ஆம் அடுத்த ஆண்டே நீர்க்குமிழி படத்தை இயக்கினார் கே.பி.
பிறர் தொட தயங்கும் கதையை துணிச்சலாக கையாண்டார். குறிப்பாக பாலச்சந்தர் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் அந்த நாட்களில் சமூகத்தின் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பதாக இருக்கும்.
அதுமட்டும் அல்ல தமிழகத்தில் அந்த நாட்களில் ஏராளமான இளைஞர்களுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லி கொடுத்தன கே.பியின் படங்கள்.
அவர் இயக்கிய படங்கள்
அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அவர்கள், மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், கல்கி போன்ற படங்களில் துளியும் ஆபாசம் இல்லாமல் பெண் சுதந்திரத்தை பொட்டில் தெரித்தாற்போல் இயக்கி இருந்தார். அவரது படத்தில் கதாநாயகர்கள் மட்டும் அல்லாத ஒவ்வொரு காட்சிகளிலும் பொருட்களில் கூட கதை பேசும் வகையில் இயக்கி இருப்பார்.
கமல் ரஜினி என ஏராளமான நடிகர்களை வார்த்தெடுத்தவர் கே.பி. 60க்கும் மேற்பட்ட புது முகங்களை திரையில் அறிமுகம் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை வைத்து மட்டும் சுமார் முப்பது படங்களை இயக்கி உள்ளார் கே.பி.
பாலச்சந்தர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாகேஷ் அவரது நாடகங்களில் நடித்தார். பின்நாளில் கே.பி படம் இயக்க தொடங்கியபோது, சர்வர் சுந்தரம், பாமா விஜயம், நீர்க்குமிழி அடுத்தடுத்து வரிசை கட்டி நாகேஷை இயக்கி இருந்தார். இதே போல் தான் உருவாக்கிய ரஜினியை வைத்து திரையில் பல்வேறு பரிச்சாத்த சோதனைகளை செய்து பார்த்தார் கே.பி. அதன் வழி அபூர்வ ராகங்கள், மூன்றுமுடிச்சு, அவர்கள், தில்லுமுல்லு என ரஜினியை தமிழ் ரசிகர்களை கொண்டாட வைத்தார். இப்படி திரை உலகில் கமல், ரஜினியின் கண்டிப்பான வாத்தியார் கே.பி தான்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்