Tanjore youth: மருந்துகளை விரைந்து கொண்டு செல்ல பிரத்யேக ட்ரோன் - தஞ்சை இளைஞர் அசத்தல்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tanjore Youth: மருந்துகளை விரைந்து கொண்டு செல்ல பிரத்யேக ட்ரோன் - தஞ்சை இளைஞர் அசத்தல்!

Tanjore youth: மருந்துகளை விரைந்து கொண்டு செல்ல பிரத்யேக ட்ரோன் - தஞ்சை இளைஞர் அசத்தல்!

Jun 03, 2024 09:04 PM IST Karthikeyan S
Jun 03, 2024 09:04 PM IST

  • கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக குருதி, அவசர சிகிச்சைக்காக மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளையும் விரைந்து கொண்டு செல்லும் வகையில் பிரத்யேக ட்ரோனை தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியாளர் வடிவமைத்துள்ளார். இந்த ட்ரோன் தமிழக அரசின் அனுமதி கோரி காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து வானூர்தி பொறியியல் படித்து ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் இளைஞர் தினேஷ் கூறுகையில், இந்த ட்ரோன் மற்ற ட்ரோன்களை விட வித்தியாசமானது. ஹெலிகாப்டர் போல் புறப்பட்டு, அது போலவே தரையிறங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவிலும் இயங்க கூடிய நிலையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் 155 கிலோமீட்டர் வேகத்தில் 180 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. மேலும் 7 கிலோ வரை உடல் உறுப்புகள், மருந்துகள் கொண்டு செல்ல முடியும். உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் இந்த ட்ரோனை இயக்கும் அளவில் இதன் சாப்ட்வேர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ட்ரோன் வசதியை முதன்முதலாக தமிழகத்திலே பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும் இதற்கு தமிழக அரசு உரிய உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

More