Captain Miller: லண்டன் தேசிய திரைப்பட விருது! தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு கெளரவம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Captain Miller: லண்டன் தேசிய திரைப்பட விருது! தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு கெளரவம்

Captain Miller: லண்டன் தேசிய திரைப்பட விருது! தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு கெளரவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 04, 2024 05:45 PM IST

லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த அயல்நாட்டு திரைப்படம் விருதை வென்று அசத்தியுள்ளது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம். ஜெர்மன், ஜப்பான் உள்பட மற்ற உலக மொழி திரைப்படங்களிடம் போட்டியிட்டு கேப்டன் மில்லர் விருதை தட்டி சென்றது.

லண்டன் தேசிய திரைப்பட விருது, தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு கெளரவம்
லண்டன் தேசிய திரைப்பட விருது, தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு கெளரவம்

சிறந்த அயல்நாட்டு மொழிப்படம் விருது

இதையடுத்து கேப்டன் மில்லர் படத்துக்கு, லண்டன் தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த அயல்நாட்டு மொழிப்படத்துக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனது அபார நடிப்பால் தனுஷ் ரசிகர்களின் பாராட்டை பெற்றிருந்தார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பீரியட் படமான கேப்டன் மில்லர் இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் காலகட்டத்தில் நடக்கும் கதையாக அமைந்திருக்கும். இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

படக்குழுவினர் மகிழ்ச்சி

தேசிய விருதுக்கு இணையாக பாரக்கப்படும் இந்த விருதை வென்றிருப்பதற்கு படத்தின் இயக்குநர் நன்றி என தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அதேபோல் படத்தயாரிப்பாளர்களான சத்யஜோதி நிறுவனமும் தனது எக்ஸ் பக்கத்தில், கேப்டன் மில்லர் பட புகைப்படங்களை பகிர்ந்து, "இந்த படத்தை உருவாக்கும் போது தங்களது கடின உழைப்பை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளனர்.

கேப்டன் மில்லருடன் போட்டியிட்ட படங்கள்

சிறந்த அயல்நாட்டு மொழிகளுக்கான பரிந்துரையில் ஸ்பெயின் மொழி படமான பக்‌ஷாக், யூ ஆர் நாட் அலோன்: பைட்டிங் தி உல்ப் பேக், ஜப்பான் மொழி படமான தி பாராடேஸ், பிலிப்பைன்ஸ் மொழிப் படமான ரெட் ஒல்லேரோ: மபுஹே இஸ் ஏ லை, ஜெர்மன் மொழி படமான சிக்ஸ்ட் மினிட்ஸ் மற்றொரு ஜெர்மன் படமான தி ஹார்ட் பிரேக் ஏஜென்சி ஆகிய படங்கள் இடம்பிடித்திருந்தன.

இதில் இந்திய மொழி படமான கேப்டன் மில்லர் படம் விருதை வென்றது.

தனுஷுக்கு உலக அளவில் அங்கீகாரம்

தனுஷ் ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் ரூசே பிரதர் இயக்கிய தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். தனுஷுக்கு ஏற்கனவே சர்வதேச முகம் கிடைத்திருக்கும் நிலையில், இந்த விருது மற்றொரு அங்கீகாரமாக அமைந்துள்ளது.

ரூ. 100 கோடி வசூல்

பொங்கலுக்கு ரிலீசான படங்களில் ரசிகர்களை கவர்ந்ததோடு கேப்டன் மில்லர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. பீரியட் படமாக இருந்தாலும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகும்.

கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் - அருண் மாதேஸ்வரன் ஆகியோர் இசைஞானி இளையராஜா பயோப்பிக்கில் மீண்டும் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைய மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.