Big Salute.. மகிழ்ச்சியளிக்கிறது.. அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Big Salute.. மகிழ்ச்சியளிக்கிறது.. அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Big Salute.. மகிழ்ச்சியளிக்கிறது.. அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Divya Sekar HT Tamil
Nov 01, 2024 08:31 AM IST

படத்தை தயாரித்த நடிகர் கமல் ஹாசனின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (31-10-2024) இரவு படக்குழுவினருடன் அமரன் படத்தை கண்டுகளித்தார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தனர்.

Big Salute..  மகிழ்ச்சியளிக்கிறது.. அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Big Salute.. மகிழ்ச்சியளிக்கிறது.. அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். இந்த நிலையில் படத்தை தயாரித்த நடிகர் கமல் ஹாசனின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (31-10-2024) இரவு படக்குழுவினருடன் அமரன் படத்தை கண்டுகளித்தார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தனர். படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அதில், நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று #அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் கே.பி , மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் #Amaran படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute!

அமரன் கதை இது தான்

மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் நுழைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது, அதற்காக அவர் வீட்டில் எப்படியான எதிர்ப்பை சந்தித்தார். இதற்கிடையே சிக்கி இருக்கும் அவரது காதல் என்ன ஆனது? ராணுவத்தில் அவர் எப்படியான சாகசங்களை செய்தார்? காஷ்மீரில் ஏன் அசாதாரண சூழ் நிலை நிலவுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் அமரன் படத்தின் கதை!

நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. அவரது மனைவி சாய் பல்லவியின் நடிப்பில் அவ்வளவு நிஜம். முகுந்த் மீது இந்து வைத்திருந்த அப்பழுக்கற்ற காதலை, ஆத்மார்த்தமான அன்பை, அவர் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் விதம் நடிப்பில் அவருக்கும் இருக்கும் ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறது. இதர கதாபாத்திரங்ளும் உண்மைக்கு நெருக்கமாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து இருக்கின்றனர்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.