சினிமாவில் இருக்கும் டேட்டிங் கலாசாரம்.. விஜய்யின் அரசியல்.. அமரன் படக்குழுவினர் உழைப்பு.. சித்ரா லட்சுமணன் தகவல்
- சினிமாவில் இருக்கும் டேட்டிங் கலாசாரம்.. விஜய்யின் அரசியல்.. அமரன் படக்குழுவினர் உழைப்பு.. சித்ரா லட்சுமணன் தகவல்
- சினிமாவில் இருக்கும் டேட்டிங் கலாசாரம்.. விஜய்யின் அரசியல்.. அமரன் படக்குழுவினர் உழைப்பு.. சித்ரா லட்சுமணன் தகவல்
(1 / 6)
டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலில் லென்ஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘'
மணி ரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பார்களா?
பதில்: ‘’மணி ரத்னத்தின் இயக்கத்தில் இந்தியா முழுக்க எல்லா நடிகர், நடிகைகளுமே நடிக்க விருப்பப்படும்போது, சாய் பல்லவிக்கு அப்படி ஒரு விருப்பம் இல்லாமல் இருக்குமா?. மணி ரத்னத்தைப் பொறுத்தவரை திறமையான நபர் என்று நினைத்துவிட்டால், அவரைத் தன் படங்களில் நடிக்கவைக்கும் கலைஞர். சாய் பல்லவி மிக விரைவிலேயே மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்''.
(2 / 6)
’’அஜித் ரசிகர்கள், விஜய் தொண்டன் என சிலர் கிளம்பியுள்ளனர். அப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் விஜய்க்கு தொண்டனாக மாற வாய்ப்புள்ளதா?
பதில்: அரசியல் வேறு, நடிப்பு வேறு என்பதைப் புரிந்துகொண்டதால் தான், நிறைய அஜித் ரசிகர்கள் விஜய்யின் கட்சியில் தொண்டர்கள் ஆகியுள்ளனர். அதேபோல், பல நட்சத்திரங்களின் ரசிகர்கள், விஜய் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது.'’
(3 / 6)
'’அமரன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பற்றி?
பதில் - அமரன் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது படக்குழு எந்தளவு முனைப்போடு பணியாற்றி இருக்கிறார்கள் என்பது படத்தின் ட்ரெய்லரில் தெரிகிறது. படத்தின் இயக்குநரும் சரி சிவகார்த்திகேயனும் சரி கடுமையான உழைப்பினைப் போட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை’’.
(4 / 6)
'’ரஜினிக்காக ஸ்ரீதேவி விரதம் இருக்கக் காரணம் என்ன? இருவரும் காதலித்தனரா?
பதில்: ரஜினி மீது அன்பும் பாசமும் மிக்கவர் தான், ஸ்ரீதேவி. ஆனால், அவர்கள் இருவரும் காதலித்ததாகத் தெரியாது. நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டும் ரஜினிக்கு ஒரு காலத்தில் இருந்தது உண்மை’’.
(5 / 6)
நடிகர் விஜய்யின் அரசியல் எப்படி இருக்கும்? விஜயகாந்த் போல் எதிர்ப்பு அரசியலா, கமல் போல் மைய அரசியலா, ரஜினிபோல் அரவணைப்பு அரசியலா?
பதில்: விக்கிரவாண்டி மாநாட்டைப் பொறுத்தவரை, அனைத்தையும் சிந்துத்துப் பார்த்துவிட்டு தான் முடிவு எடுத்திருக்கிறார், விஜய் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விஜயை அலட்சியமாகப் பார்த்தவர்கள் கூட, இந்த மாநாட்டிற்குப் பின் கவனமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
(6 / 6)
நீங்கள் சினிமாவை விட்டுவிட்டு வேறு துறைக்குச் செல்லலாம் என நினைத்தது உண்டா?
பதில்: எந்தக் காலத்திலும் சினிமாவை விட்டு வேறு துறைக்குச் செல்லலாம் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டதே இல்லை. அதனால் தான், சினிமாவில் இன்று வரை வெவ்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த எண்ணம் தோன்றாதது தான், இப்போதுவரை எனது பணிகளுக்குக் காரணம்.
நன்றி:டூரிங் டாக்கீஸ் யூட்யூப் சேனல்,
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
மற்ற கேலரிக்கள்