தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbd A.r. Rahman: Music Storm A.r. Raghumans Birthday Today

HBD A.R. Rahman: சின்னச் சின்ன ஆசையில் தொடங்கிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பிறந்த நாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 06, 2024 07:00 AM IST

"சின்ன சின்ன ஆசை" என்ற பாடலோடு ரோஜா வில் ஆரம்பித்த பயணம் 2 ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார்.

ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான்

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு.

மலையாள இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர் மற்றும் கஸ்தூரி தம்பதியருக்கு மகனாக 1967 ஜனவரி 6 ல் சென்னையில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பதினோராம் வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்தார். 

எம்.எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதனிடமும் பணி புரிந்தார். மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜிடம் கற்றார். நிறைய விளம்பர படங்களுக்கு இசை அமைத்தார்.1992 ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படம் இவரின் இசையில் முதல் படமாக வெளியானது. முதல் படத்திலேயே முந்தைய காலகட்டத்தின் இசையை போல இல்லாமல் புது மாதிரியாக ரசிகர்களை உணர வைத்தார். ரோஜா வின் பாடல்களும் பின்னனி இசை கோர்ப்பும் ரசிகர்களை புதிதாக கொண்டாட வைத்தது. எல்லோரது கவனமும் இவர் மேல் விழுந்தது.

ரோஜாவில் ஆரம்பித்த பயணம் புயல் வேகமாக இந்திய எல்லைகளை கடந்து உலகெங்கும் பரவியது. இசைக்கு ஏது மொழி என்பது போல தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று தனது எல்லையை விரித்தார்.

விருதுகள்:

இவர் பெற்ற விருதுகளை பட்டியல் போட பல பக்கங்கள் தேவை. பலமுறை பிலிம்பேர் விருதுகள், பல மாநில அரசு விருதுகள், பல முறை தேசிய விருதுகளை இவரின் கைகள் சுமந்தன. "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற ஆங்கில படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருதுகளை பெற்ற முதல் இந்தியர் ஆவார். இதே படம் ஆஸ்கார் விருதையும் பெற்று தந்தது. உலகின் எந்த விழா மேடையிலும் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற வார்த்தைகளை சொல்லி விட்டு தான் பேச ஆரம்பிப்பார்.

கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரிபவர். இசையில் புதுமையை கொண்டு வந்தவர். திரைப்படம் மட்டும் இன்றி தனிப் பாடல்களை ஆல்பமாக வெளியிடுவதும் இசைக்கச்சேரிகள் நடத்தவும் செய்கிறார்.

இவரது மனைவி பெயர் ஷெரீணாபீவி. மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் சகோதரி ரைஹானா அவர்களின் மகன் தான் இசை அமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ்.

இவரது இசையில் படங்கள் வந்தால் அதற்கு என்று தனி வியாபாரம் உண்டு என்று கூறலாம்.

"சின்ன சின்ன ஆசை" என்ற பாடலோடு ரோஜா வில் ஆரம்பித்த பயணம்  2 ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் முப்பது ஆண்டு கால உழைப்பு இசை பயணத்தில் அவரை ஆஸ்கார் நாயகனாக உயர்த்தி இருக்கிறது. அவரின் பணிவும் அன்பும் அவரை இன்னும் சிகரம் தொட வைக்கும். அவரது பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போல் தோன்றும்.  இப்படி 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.