RIP Bhavatharini : 'அம்மாவின் வாசனை’ பவதாரணியின் குரலை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்!
மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் குரலை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்
பிரபல சினிமா பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜா மகளுமான பவதாரணியின் திடீர் மரணம், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( ஜன.25) காலமானார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்று உள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார்.
5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். அப்படி இருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் .