GOAT Box Office Day 2: இரண்டாவது நாளில் வசூலில் சறுக்கிய தி கோட்..இனி இவர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்-goat box office collection day 2 vijays film earns nearly rs 70 crore in india - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat Box Office Day 2: இரண்டாவது நாளில் வசூலில் சறுக்கிய தி கோட்..இனி இவர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்

GOAT Box Office Day 2: இரண்டாவது நாளில் வசூலில் சறுக்கிய தி கோட்..இனி இவர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 07, 2024 10:00 AM IST

தளபதி விஜய்யின் தி கோட் படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்று மற்றும் நாளை என இரண்டு விடுமுறை தினம் இருப்பதால் பேமிலி ஆடியன்ஸ் வருகை மூலம் மீண்டும் உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

GOAT Box Office Day 2: இரண்டாவது நாளில் வசூலில் சறுக்கிய தி கோட்..இனி இவர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்
GOAT Box Office Day 2: இரண்டாவது நாளில் வசூலில் சறுக்கிய தி கோட்..இனி இவர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்

தி கோட் திரைப்படம் முதலில் நாளில் ரூ. 126.32 கோடி வசூலித்ததாக படத்தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வகமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தி கோட் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தி கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இரண்டாவது நாள்

Sacnilk.com படி, ஆக்‌ஷன் படம் வெளியான இரண்டாவது நாளில் ரூ. 68 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றும், நாளையும் விடுமுறை நாள் இருப்பதாலும் பேமிலி ஆடியன்ஸ் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி கோட் படம் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

தி கோட் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 44 கோடி (தமிழ்: ரூ. 39.15 கோடி; இந்தி: ரூ.1.85 கோடி; தெலுங்கு: ரூ. 3 கோடி) வசூலித்தது. ஆரம்ப மதிப்பீடுகளின்படி, அனைத்து மொழிகளிலும் அதன் இரண்டாவது நாளில் இந்தியாவில் சுமார் ரூ. 24.75 கோடி (தமிழ்: ரூ. 22 கோடி; இந்தி: ரூ.1.5 கோடி; தெலுங்கு: ரூ. 1.25 கோடி) சம்பாதித்துள்ளது.

இதுவரை படம் இந்தியாவில் ரூ.68.75 கோடி [தமிழ்: ரூ. 61.15 கோடி; இந்தி: ரூ. 3.35 கோடி; தெலுங்கு: ரூ. 4.25 கோடி] வசூலை ஈட்டியுள்ளது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே 'தி கோட்'. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், விடிவி கணேஷ், அர்விந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் எப்படி?

Goat Movie Review: கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்துக்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்த பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக ஜீவன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.

தி கோட் படம் பற்றி

அறிவியல் புனைகதை படமாக இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், சிநேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் பட்டையை கிளப்பியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.