தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo 3d Animation: லோகேஷூக்கு டஃப் கொடுக்கும் லியோ அனிமேஷன் வீடியோ- பாராட்டிய Rrr Vfx மேற்பார்வையாளர்!- வைரலான விஜய்!

Leo 3D Animation: லோகேஷூக்கு டஃப் கொடுக்கும் லியோ அனிமேஷன் வீடியோ- பாராட்டிய RRR VFX மேற்பார்வையாளர்!- வைரலான விஜய்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 22, 2023 11:55 AM IST

லியோ 3 டி அனிமேஷன் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Fan Made vijay Lokesh Kanagaraj Leo 3D Animation Video Viral On social media appreciate rrr supervisor Srinivas Mohan
Fan Made vijay Lokesh Kanagaraj Leo 3D Animation Video Viral On social media appreciate rrr supervisor Srinivas Mohan

ட்ரெண்டிங் செய்திகள்

Fan Made vijay Lokesh Kanagaraj Leo 3D Animation Video Viral On social media appreciate rrr supervisor Srinivas Mohan
Fan Made vijay Lokesh Kanagaraj Leo 3D Animation Video Viral On social media appreciate rrr supervisor Srinivas Mohan

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மேடி மாதவ் என்ற வி.எஃப்.எக்ஸ் கலைஞர் லியோ டைட்டில் வீடியோவின் பின்னணி இசையை பயன்படுத்தி லியோ 3டி அனிமேஷன் வீடியோ என்ற ஒன்றை உருவாக்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் த்ரிஷா காரை ஓட்ட பின்னால் இருக்கும் விஜய் அமர்ந்து இருக்கிறார். அவர்கள் கும்பல் ஒன்றை துரத்த அதனை அந்த கும்பல் கண்டுபிடித்து விடுகிறது. அவர்கள் மீது துப்பாக்கித்தாக்குதலையும் தொடுக்கிறது.

அதனை விஜயையும் த்ரிஷாவும் எப்படி லாவகமாக கையாண்டு வீழ்த்தினார்கள் என்ற கதையை அழகான குட்டி ஸ்டோரியாக 3 நிமிடம் 30 நொடிகளில் அந்த வீடியோ விரிகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த வீடியோவை பார்த்த 2.oஆர்.ஆர்.ஆர், பாகுபலி - முதல் பாகம் எந்திரன் ஆகிய படங்களின் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீநிவாஸ் மோகன் மேடியை பாராட்டி இருக்கிறார். அதே போல லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மேடியின் வீடியோ பதிவை பகிர்ந்து அவரை பாராட்டி இருக்கிறது. அதே போல நடிகர் சாந்தனுவும் அந்த வீடியோவை பாராட்டி இருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறது.

இவர்களுடன் இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு முன்னதாக விஜயின் ‘பீஸ்ட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்ததாகவும் கூறப்பட்டது. 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்