Actress: பாலியல் நோயில் இறந்த பிரபல தமிழ் நடிகை.. யார் காரணம்: அதிர வைக்கும் பின்னணி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress: பாலியல் நோயில் இறந்த பிரபல தமிழ் நடிகை.. யார் காரணம்: அதிர வைக்கும் பின்னணி!

Actress: பாலியல் நோயில் இறந்த பிரபல தமிழ் நடிகை.. யார் காரணம்: அதிர வைக்கும் பின்னணி!

Marimuthu M HT Tamil
Sep 10, 2024 07:16 PM IST

Actress: பாலியல் நோயில் இறந்த பிரபல தமிழ் நடிகை பற்றியும் அதற்கு யார் காரணம் என்பது குறித்தான அதிர வைக்கும் பின்னணி பற்றிப் பார்ப்போம்.

Actress: பாலியல் நோயில் இறந்த பிரபல தமிழ் நடிகை.. யார் காரணம்: அதிர வைக்கும் பின்னணி!
Actress: பாலியல் நோயில் இறந்த பிரபல தமிழ் நடிகை.. யார் காரணம்: அதிர வைக்கும் பின்னணி!

இதுதொடர்பாக திரைக்கூத்து யூட்யூப் சேனலுக்கு சினிமா பத்திரிகையாளர் வித்தகன் சேகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ என் வீடியோவின் சிலவற்றில் 80களின் பிரபல நடிகை ஷாஷா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பற்றி பேசுங்க அப்படின்னு கேட்டுருக்காங்க. நேயர்களின் விருப்பத்திற்கேற்ப ஷாஷா பற்றி பேச வந்திருக்கேன்.

1980-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர், நடிகை ஷாஷா. தமிழில் மட்டுமே சுமார் பத்து படங்களில் நடிகை ஷாஷா நடிச்சிருக்காங்க. 1980ஆம் வருஷம், கே.ஆர். விஜயா, சரத் பாபு நடிச்ச ‘மங்கள நாயகி’ படத்தில் ஷாஷா முதன்முறையாக தமிழில் அறிமுகம் ஆகுறாங்க. கிருஷ்ணன் பஞ்சு டைரக்‌ஷன். திரை வாழ்க்கை மங்களகரமாகத் தொடங்கினாலும், இந்த நடிகையின் வாழ்க்கை அநாதையாக அமங்களமாக முடிந்துபோனதுதான் சோகம். அதன்பின், சுமன், ராதிகாவுடன் ‘இளமைக்கோலங்கள்’ படங்களில் நடிச்சிருக்காங்க. இந்த இடத்தில் ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருது. சுமன் உடன் ‘எனக்காக காத்திரு’ அப்படிங்கிற படத்தில் நடிச்சிருக்காங்க. கே.பாலச்சந்தர் தயாரித்து, விசு இயக்கிய ‘அவள் சுமங்கலி தான்’ படத்தில் கார்த்திக் உடன் நடிச்சிருக்காங்க. 1981ல் பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தில், கமல்ஹாசனுடன் ஷாஷா நடிச்சிருக்காங்க.

பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருந்த நடிகை:

மலையாளத்தில் மம்மூட்டி நடித்து சக்கைப்போடுபோட்ட ‘ஐயர் தி கிரேட்’ படத்தில், ஷாஷா நடிச்சிருக்காங்க. 1985ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் தயாரித்து, இயக்கிய, ’கல்யாண அகதிகள்’ படத்தில், முக்கிய கேரக்டரில் நடிச்சிருக்காங்க. அதன்பின் வாகை சந்திரசேகர் ஜோடியாக, கதாநாயகியாகவே, ‘இனிமை இதோ இதோ’ திரைப்படத்தில் படம் முழுக்க வருவாங்க. சொல்லப்போனால், அந்தப் படம் ஹீரோயின் சப்ஜெக்ட் மூவி. இப்படி அழகும் நடிப்பும் இருந்த ஷாஷாவுக்கு, ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது.

அப்படிப்பட்ட ஷாஷாவின் வாழ்க்கை திசைமாறிப்போனது தான் விதி என்று சொல்லமுடியும். விதியில் இருந்து தப்பிக்கமுடியாது என்று திருவள்ளுவரே குறளில் சொல்லியிருக்கிறார். இதற்கு உதாரணம் தான், ஷாஷாவின் வாழ்க்கை. என்ன காரணத்துக்காகவோ, ஷாஷாவுக்கு பட வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. இதனால் பணரீதியாக சிரமத்திற்கு உள்ளானார், நடிகை ஷாஷா. இவர் மலையாளத்திலும் நடித்துக் கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் மலையாளத் தயாரிப்பாளர் ஒருவருக்கு ஷாஷாவின் பொருளாதார நிலைமைத் தெரிய வந்திருக்கிறது. அவர் ஷாஷாவிடம் தன்னுடைய நண்பர்களோடு அட்ஜெஸ்ட்மென்ட் செய்துகொள், நிறைய பணம் தருவார்கள் என ஆசை வார்த்தை காண்பித்து, ஷாஷாவை, நண்பர்களின் உடல் பசிக்கு இரையாக்கினார்.

விலைமாதராக மாறிய நடிகை:

அதன்பின், அந்த தயாரிப்பாளர் ஷாஷாவை வற்புறுத்தி, முழுநேர விபச்சாரியாகவே, விலைமாதராகவே மாற்றிவிட்டார்.

சினிமாவைப் பொறுத்தவரை, ஏற்கனவே விபச்சாரம் செய்துகொண்டு இருந்தவர் நடிகையானால் கூட ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல், 1980-களுக்கு முன்னால், விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் நடிகையாக நடிக்கத்தொடங்கி, முன்னணி நடிகையாகி, பின் அரசியலிலும் கால் பதித்து, லோக் சபாவின் உறுப்பினராக ஆகியிருக்கிறார். இதைப்பற்றி முன்னர் ஒரு வீடியோவில் பேசியிருந்தேன். அதுபோல விபச்சாரம் செய்துவிட்டு, நடிகையானால்கூட சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், சினிமாவில் நடிக்க வந்தபின், ஒரு பெண் விபச்சாரத்தில் இருப்பது தெரியவந்தால், அவர்களை திரையுலகத்தில் இருந்து நீக்கிவைத்துவிடுவார்கள். ஏனென்றால், முன்பு இருந்த ரசிகர்கள் திரும்பவும் படம்பார்க்கமாட்டார்கள் என்று கருதுவர். ஷாஷாவுக்கும் இந்த அவலம் தான் நடந்தது. படவாய்ப்புகள் முற்றிலுமே இல்லாமல்போனதால், ஷாஷாவுக்குக் குடும்பத்தினரின் ஆதரவும் இல்லை. தோழிகளும் அவ்வளவு இல்லை. இதனால் அவர் முழுநேர விலைமாதராகவே மாறிப்போனார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அந்த தொழிலில் இருந்தார். அதன்பின் 2007ஆம் ஆண்டு, தன்னுடைய 44ஆம் வயதில் தாம்பரம் தர்கா வசூலில் எலும்புத்தோளுமாக விழுந்துகிடந்தார். தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள், கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து போலீஸிலும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். விசாரித்தபின் தெரியவந்திருக்கிறது, பிரபல நடிகை ஷாஷா என்று. பின் எல்லா மீடியாக்களிலும் செய்தி வந்தது. ஆனால், அவருக்கு பாலியல் நோய் முற்றிப்போனதால், பல நாட்கள் பட்டினி கிடந்ததால் இறந்துபோனார். ஷாஷா இறந்தது 2007ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் தேதி. அவரது நினைவுநாளை அனுசரிக்கக்கூட, ஷாஷாவுக்கு உறவினர்கள் இல்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். உலகில் யாருக்குமே நிகழக்கூடாதது ஷாஷாவின் வாழ்க்கை’’என பத்திரிகையாளர் வித்தகன் சேகர் தன் நினைவுகளைப் பகிர்ந்தார்.

நன்றி: திரைக்கூத்து

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.