தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adipurush: வசூலில் படுதோல்வி; மன்னிப்பு கோரிய ஆதி புருஷ் வசனகர்த்தா!

Adipurush: வசூலில் படுதோல்வி; மன்னிப்பு கோரிய ஆதி புருஷ் வசனகர்த்தா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 08, 2023 12:18 PM IST

மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் இரு கைகளை குவித்து மன்னிப்பு கோருவதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்

ஆதி புருஷ்
ஆதி புருஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆதிபுருஷ் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வசூலை தரவில்லை. இதனால் முன்கூட்டியே ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வசனங்களை மனோஜ் முன்டாஷிர் சுக்லா எழுதியிருந்தார். ஆதிபுருஷ் படம் வெளியாகும் முன்னரே மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சார்ட்டு எழுந்தது.

இந்நிலையில் தற்போது மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் இரு கைகளை குவித்து மன்னிப்பு கோருவதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக போலீஸ் பாதுகாப்பு கோரியிருந்தார் மனோஜ் முன்டாஷிர் சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த திரைப்படங்களில் ஒன்று ஆதிபுருஷ். ஆதிபுருஷ் படத்தை ஓம் ரவுத் இயக்கினார். ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், ராவணனாக சைஃப் அலிகான் நடித்து உள்ளனர். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. வசனங்கள், கிராபிக்ஸ், கதை என விமர்சனங்கள் வருகின்றன. இப்படம் ஜூன் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படம் ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் ஃபிரைம் வீடியோ) வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி எட்டு வார இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்கள் அமேசான் ஃபிரைம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இந்தப் படம் வெளியாகும் எனத் கூறப்பட்டிருந்தது.

ஆனால் படம் வெளியாகி முதல் மூன்று நாட்கள் வசூலில் சாதனை படைத்தது. மூன்று நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால், அதன் பிறகு வசூல் வெகுவாகக் குறைந்தது.

இருப்பினும் திரையரங்குகளில் மோசமான வரவேற்பு காரணமாக படம் எதிர்பார்த்ததை விட ஓடிடிக்கு முன்னதாக தளத்தில் நுழைய வாய்ப்பு உள்ளது. ஜூலை நடுவில் இல்லையென்றால், ஜூலை இறுதிக்குள் ஆதிபுருஷ் ஓடிடிக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்