Fact Check: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?-fact check is the video of actor dhanushs fans attacking actor sivakarthikeyan true - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fact Check: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

News checker HT Tamil
Aug 18, 2024 12:31 PM IST

Dhanush vs SivaKarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact Check: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

கூற்று: சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் ரசிகர்கள் அடி, உதை

உண்மை: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு அவரை கமல் ரசிகர்கள் தாக்கியபோது எடுக்கப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

"தனுஷ் தன்னை வளர்த்து விட வில்லை என கூறிய நடிகர் சிவகார்த்திகேயன் க்கு சரமாரி அடி உதை குடுத்த ரசிகர்களால் பரபரப்பு" என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2015ஆம் ஆண்டு நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த இந்த வீடியோ கிடைத்தது.

அதில், “Actor Sivakarthikeyan attacked by kamal fans at Madurai airport” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து விகடன் வெளியிட்டிருந்த கட்டுரையில் அவர் பேட்டி ஒன்றில் தன்னை ரஜினி ரசிகர் என்று கூறியதாலும், கமல் குறித்து பேசியதாலும் அவர் மீது மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

இது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், " எனது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் உண்மையில்லை. தாக்குதல் நடந்ததாக கூறப்படும் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நானும் சிவகார்த்திகேயனும் மதுரையில் நிகழ்ச்சி முடிந்து ஒன்றாகத்தான வருகிறோம்." என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்

இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், " எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் நலமாகத்தான் உள்ளே." என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் அப்போதே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

பொறுப்புத்துறப்பு

இந்தச் செய்தி முதலில் newschecker-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

நடந்தது என்ன?

சூரி நடிப்பில் வெளியாக உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

'கொட்டுக்காளி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, "யாரையும் கண்டுபிடித்து; இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்; நான்தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை. இதோ எனது நண்பர் இவர்தான் என்று ஒரு அறிமுகம் செய்வோம் இல்லையா. அப்படித்தான் இதனை நான் செய்கிறேன். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.