Kottukkaali Trailer: அடுத்த விருது எடுத்து வைங்க.. மிரட்டலான நடிப்பு - சூரியின் தரமான நடிப்பில் கொட்டுக்காளி ட்ரெய்லர்-sivakarthikeyan unveils trailer for soori kottukkaali movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kottukkaali Trailer: அடுத்த விருது எடுத்து வைங்க.. மிரட்டலான நடிப்பு - சூரியின் தரமான நடிப்பில் கொட்டுக்காளி ட்ரெய்லர்

Kottukkaali Trailer: அடுத்த விருது எடுத்து வைங்க.. மிரட்டலான நடிப்பு - சூரியின் தரமான நடிப்பில் கொட்டுக்காளி ட்ரெய்லர்

Aarthi Balaji HT Tamil
Aug 13, 2024 01:06 PM IST

Kottukkaali Trailer: ரிலீஸுக்கு முன்பே கொட்டுக்காளி திரைப்படம், பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது .

மிரட்டலான நடிப்பு - சூரியின் தரமான நடிப்பில் கொட்டுக்காளி ட்ரெய்லர்
மிரட்டலான நடிப்பு - சூரியின் தரமான நடிப்பில் கொட்டுக்காளி ட்ரெய்லர்

இப்படத்தை தமிழின் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், தனது எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

சர்வதேச திரைப்பட விழா

ரிலீஸுக்கு முன்பே கொட்டுக்காளி திரைப்படம், பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது . இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, 2024 ஆம் ஆண்டு வெளியாகிறது. இதற்கான விளம்பர வேலையில் படக்குழு இறங்கி உள்ளது.

கொட்டுக்காளி ட்ரெய்லர்

இதனிடையே கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

ஓபன் செய்தவுடன், “ ஆரம்பத்திலேயே சேவல் தான் காட்டப்படுகிறது. அதை குறுகுறுவென பார்க்கிறார் ஹீரோயின் அன்னா பென். அதை தொடர்ந்து சூரி தொண்டை கட்டிய படி, மூன்று பேருடன் பைக்கில் செல்கிறார்.

அவரை காவல் துறையினர் மடக்கி நிறுத்தி, ஏங்கே செல்கிறாய் என கேட்க அவர் தனது குரலில் எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் புடிச்சிருக்கு விரட்ட போறோம் என சொல்கிறார்.

சூரியின் நடிப்பு

அதை தொடர்ந்து குடும்பம் முழுவதும் கோயிலுக்கு சென்று ஏதோ சாங்கியம் செய்கின்றனர். பெரிய அளவில் பின்னணி இசை இல்லை. ஆனாலும் எதார்த்தமான சத்தத்தோடு பயணிக்கிறது ட்ரெய்லர். சேவல் சத்தம் தான் ட்ரெய்லர் முழுவதும் காட்டப்பட்டது.

இதில் திடீரென சூரி ஆங்கிரி மோடுக்கு மாறினார். அதைத் தொடர்ந்து கலவரத்தோடு ட்ரெய்லர் முடிந்தது. 2.08 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் வசனங்கள் குறைவாக உள்ளன.

பார்க்கும் போது எதுவும் புரியாவிட்டாலும் நிச்சயம் படத்திற்குள் ஒரு பெரிய சம்பவம் இருக்கும் போல் இருக்கிறது. சூரியின் நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விடுதலை, கருடன் படங்களை தொடர்ந்து இந்த படமும் வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அன்னா பென் பேட்டி

நடிகை அன்னா பென் முன்பு கொடுத்த பேட்டியில், ‘’சூரி சார் காமெடி ரோலில் நடித்து சமீப காலமாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவருடைய பரோட்டா காமெடி காட்சியெல்லாம் நான் பார்த்திருக்கேன். ஆனால், அதன்பின், நான் அவர் நடித்த விடுதலை படம் பார்த்து, பிரமித்துள்ளேன். அவர் என்னுடன் பணிசெய்யும்போது சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நடிக்கும்போது இதனை நான் முதன்முறையாக முயற்சித்துபார்க்கிறேன் என்று என்னிடம் கூறினார். அதனை நான் அருகில் இருக்கும்போது பார்க்கும்போது பெருமையாக இருந்தது.

சீரியஸ் படத்தில் நடிக்கும்போது கொஞ்சம் பிரேக் கிடைக்கும்போது எல்லாம் சிரிச்சிட்டுத்தான் இருப்போம். கேமரா ஆன் பண்ணும்போது சீரியஸ் ஆகிடுவோம்.

எல்லோரும் என்னை கதாபாத்திரத்தின் பெயரான ’மீனா’ என்ற பெயரை வைச்சு தான் கூப்பிடுவாங்க. ’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது. அது உலகில் பெண்கள் படும்பிரச்னைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கும். இதுக்குத் தேவையான இசை இப்படத்தில் இருக்கும். ஆனால், பாடல் எல்லாம் கிடையாது.

சிவகார்த்திகேயன் சார், சினிமா எடுக்கும்போது எல்லாம் செட்டிற்கு வரவில்லை. இயக்குநரின் கிரியேட்டிவ் ஆன யோசனைகளை எல்லாம் சுதந்திரமாக படமாக்கவிட்டார். இயக்குநரையும் நடிகர்களையும் மிகவும் நம்பினார்.

என்னுடைய எந்தவொரு படத்தையும் அவர் பார்த்தது கிடையாது. ஆனால், அந்த வாய்ப்பை தந்தாங்க. ‘கொட்டுக்காளி’ படம் பார்த்துட்டு, என்னுடைய நடிப்பு நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஒரு கட்டத்தில் நான் அவர் கூட நடிக்கணும்னு சொன்னேன். அப்போது வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக ஒன்றாக சேர்ந்து நடிப்போம் என்று சிவகார்த்திகேயன் சார் என்னிடம் சொன்னார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.